பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர் காலம்

137

பல்லவர் காலம் 137 என்ற தம் நூலில். தொல்காப்பியனார் சமணரே என்று இவர் துணிந்து தம் கருத்தினை வலியுறுத்தப் பல சான்று களும் காட்டியுள்ளார். இக் கருத்தினைப் பலர் உடன்படுவ தில்லை. அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறை முன்னாள் பேராசிரியர் திரு. க. வெள்ளைவாரணனார் அவர்கள், தம் 'தொல்காப்பியம் - இலக்கிய வரலாறு' எனும் நூலில், பிள்ளையவர்கள் கருத்தைத் தக்க சான்றுகள் காட்டி மறுத்துரைத்துள்ளார் கள் . - -- - - | |- - - சங்க காலத்தில் உலோச்சனார், நிகண்டனார் என்ற புலவர்கள் வாழ்ந்திருந்தார்கள். உலோச்சனார் பாடியன வாக முப்பத்தைந்து செய்யுள்கள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. நெய்தல் திணைப் பாடல்கள் பலவற்றை யும் இவர் பாடியுள்ளார். நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் எனும் சங்கப் புலவர் பாடிய பாடலும், நற்றிணையில் நெய்தல் திணைப் பாடலாகவே வந்துள்ளது. இப்பாடல் உள்ளத்தினை உருக்குவதாய் அமைந்துள்ளது. அடுத்து, திருக்குறளில் சமண சமயக் கருத்துகள் பல உள்ளன என்பர். 'அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று' என்ற குறள் வைதிக மார்க்கத்தினையும், 'தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும் விலைபொருட்டா லூன் தருவா ரில்' என்ற குறள் பெளத்த தருமத்தினையும் மறுத்துரைக் கின்றது என்று கொள்வர். மேலும், இன்னா செய்யாமை, கள்ளுண்ணாமை முதலிய அறக்கருத்துகளும், மற்றும் திருவள்ளுவர் கூறும் பொருள் இன்பக் கருத்துகளும் சமண சமயக் கருத்துகளின் விளைவே (effect) என்பர்.