பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலம்

177


விளைந்த களத்தூரில் பிறந்தவர் என்பதை உணர்த்தும் இவர் துளுவ வேளாள மரபினர்.

வெண்பா யாப்பில் அமைந்தது இவர் இயற்றிய நளவெண்பா. தமிழில் வெண்பாவில் அமைந்துள்ள நூல்களில் இதுவே தலை சிறந்தது. வெண்பாப் பாடுவதில் புகழேந்தி இணையற்றவர் என்பதைக் கீழ்க்காணும் பாட்டில் கண்டு உணரலாம்.

'வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்
செயங்கொண்டான் விருத்த மென்னும்
ஓண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா
அந்தாதிக் கொட்டக் கூத்தன்
கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்
வசைபாடக் காளமேகம்
பண்பாய வுயர்சந்தம் படிக்காச

லாதொருவர் பகரொ ணாதே'

நளவெண்பா முதல் நூல் அன்று. மகாபாரதத்தில் கூறப்பட்டிருக்கும் 'நளோபாக்கியானம்' என்ற நளன் வரலாற்றைப் புகழேந்திப் புலவர் தமிழில் செய்தார். நளவெண்பா, 'சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம் கலி நீங்கு காண்டம்' என்னும் மூன்று காண்டங்களும், 424 நேரிசை வெண்பாக்களும் கொண்டது. ஆசிரியர் இயற்கையினை இனிமையும் எடுத்து இயம்புகிறார்.

"மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
வில்லி கணைதெரிந்து மெய்கரம்பு - முல்லை மலர்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே

புன்மாலை அந்திப் பொழுது" [1]

இவர் நளவெண்பாவின் ஒரு செய்யுளில் முரணை நகர்ச் சந்திரன் சுவர்க்கி' என்னும் சிற்றரசனைப் புகழ்ந்து பாடி


  1. நள வெண்பா, சுயம்வர காண்டம். 17.

த. - 12