பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

தமிழ் இலக்கிய வரலாறு


போற்றும் பாண்டியர், சோழர், பல்லவர் ஆண்ட நாட்டை விட, அதிகப் பரப்புள்ளது நாயக்கர் அரசின் கீழிருந்த நாடு.... நல்ல வளமான நிலையில் இருந்ததென்றே கொள்ள வேண்டும்... இந்திய சிற்பக்கலை நிபுணர் ஜேம்ஸ் பெர்கூசன் என்பார் கூறுவது போல, தென்னாட்டின் கலைச் செல்வங்கள் பல நாயக்கர்களால் ஆனவையே... மதுரையில் நாம் இன்று காணும் திருக்கோயிலும், ஆயிரக்கால் மண்டபமும், திருமலை நாயக்கர் காலத்தில் ஏற்பட்டவைகளே. இந்த ஆயிரக்கால் மண்டபத்தைக் கட்டுவதற்கு மட்டும் 1623 முதல் 1645 வரை 22 ஆண்டுகள் பிடித்தனவென்று கணக்கிடப்பட்டிருக்கிறது. வைணவர்கள் முதல் இடம் தந்து போற்றும் ஸ்ரீரங்கம் கோயில் நாயக்கர் காலத்தில் எழுந்ததே; பேரூரில் நாம் காணும் கோயிலின் இப்போதைய நிலை நாயக்கர் காலத்தில்தான் அடைந்தது."

இவ்வாறு பலவாறாக நாயக்கர் காலத்தைப் பற்றி டாக்டர் மு. ஆரோக்கியசாமி அவர்கள் கூறியுள்ளார்கள்.1

நாயக்க மன்னர் வைணவர்களாய் இருந்த போதிலும், பிற சமயத்தினரையும் ஆதரித்து வந்தனர் என்பது கொள்ளக்கிடக்கின்றது. இவர்கள் ஆட்சியில் முகம்மதியத் தர்க்காக்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன. கிறித்தவ மதம் முதலில் பரவிய இடமும் இவர்கள் ஆட்சி செலுத்திய மதுரைதான். இக்காலத்தில் சைவ வைணவ மடங்கள் தங்கள் தங்கள் சமயத்தை வளர்த்தன. கோயில்கள் புதுப்பிக்கப்பட்டன; பல புதிய பெரிய கோயில்களும் எழுப்பப்பட்டன. கோயில்களைப் பற்றிய தல புராணங்களையும் புலவர் எழுதுவாராயினர். பள்ளு, உலா, கலம்பகம், தூது முதலிய சிறு பிரபந்தங்கள் இக்காலத்தில்தான் மிக வளர்ந்தன. சமயத்தின் உட்பிரிவுகளும், தத்துவார்த்தக் கருத்துகளும் நாடெங்கும் பரவின. இவ்வாறு பல துறை


1. டாக்டர் மு. ஆரோக்கியசாமி, மதுரைத் தமிழ்ச் சங்கம் பொன் விழா மலர், நாயக்கர் காலம் ப. 39, 40, 41,