பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயக்கர் காலம்

181


களிலும் நாயக்கர் காலத்தில் தமிழ் நாடு முன்னேறியது எனலாம்.


உரையாசிரியர்கள்

பதின்மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி, அதனை அடுத்த சில நூற்றாண்டுகள் வரையிலும் சைவ சித்தாந்த சாத்திரங்களும் அவற்றிற்கு உரைகளும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திற்கு உரைகளும், தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், திருக்கோவையார் முதலிய நூல்களுக்கு உரைகளும் தோன்றத் தலைப்பட்டன. புதிய நூல்கள் மட்டுமின்றி, இக் காலத்திற்குமுன் தமிழ் மொழியில் தோன்றிய சிறந்த சில நூல்களுக்கும் உரையாசிரியர்கள் உரை வகுக்கத் தொடங்கினமையால், இக் காலத்தை நாம் 'உரையாசிரியர் காலம்' எனக் குறிக்கலாம்.

முதற்கண் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் அவற்றிற்கு எழுந்த உரைகளையும் காண்போம் :

சைவ சித்தாந்த தத்துவத்தைப் பற்றி மேனாட்டு அறிஞர்கள் பலவாறாகச் சிறப்பித்துப் பேசுகிறார்கள். டாக்டர் போப்பு அவர்கள், இது 'திராவிடர்களின் அறிவாற்றலின் விளைவு' என்றும், 'இந்தியாவிலுள்ள எச்சமயத்தினும் விரிவானதும், செல்வாக்குப் பெற்றதும், மதிப்பு வாய்ந்ததுமாகும்' என்றும் பாராட்டியுள்ளார்.1 மறைத்திரு. கெளடி என்பவர்."சைவ சித்தாந்தக் கொள்கை


1. It is the choicest product of the Dravidian intellect, and the most elaborate, influential and undoubtedly the more intrinsically valuable of all the religions of India-Rev. Dr. Pope