பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயக்கர் காலம்

185


அமைந்த இந்நூல் பத்து நேரிசை வெண்பாவும், பத்து நேரிசையாசிரியப்பாவும் கொண்டது.

உண்மை விளக்கம்

ஐந்தெழுத்தாம் 'நமசிவாய' என்ற தத்துவப் பொருளை விளம்பி நிற்கும் இந்நூலின் ஆசிரியர், மெய்கண்ட தேவரின் மாணவர் திருவதிகை மனவாசகங் கடந்தார் ஆவர்.

சிவப்பிரகாசம்

பதினான்கு சைவசித்தாந்த சாத்திரங்களில் முற்கூறிய ஆறு நூல்கள் போக, எஞ்சிய எட்டு நூல்களையும் இயற்றியவர் கொற்றவன் குடி உமாபதி சிவாசாரியார் ஆவர். இவர் மறைஞான தேசிகரின் மாணவர். இந்நூலின் பாயிரத்தில் அமைந்த பாட்டொன்றில்,

'தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா இன்று
தோன்றிய நூல் எனும் எவையும் தீ தாகா'

என்று கூறியிருப்பது உணரத்தக்கதாகும். பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த இப் பெரியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார் என்ற இரண்டு நூல்களையும் அடியொற்றி இந்நூலினை ஆக்கியுள்ளார்.

திருவருட்பயன்

பத்துப் பத்துக் குறள் வெண்பாக்களைக் கொண்ட பத்துப்பத்து அதிகாரங்களில் சித்தாந்த உண்மைகளை இந்நூல் விளக்குகிறது.

வினா வெண்பா

தம் ஞானாசிரியராகிய மறைஞான சம்பந்தரை வினவுவது போல் சித்தாந்தக் கருத்துகளை ஆசிரியர் இந் நூலில் அமைத்துள்ளார்.