பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

தமிழ் இலக்கிய வரலாறு


போற்றிப் பஃறொடை வெண்பா

கலிவெண்பாவில் அமைந்த இந்நூலில் ஆசிரியர் தம் ஞான குருவின் அருட்செயல்களை அகங்குளிர நினைந்து நினைந்து போற்றுகிறார்.

கொடிக் கவி

தில்லையில் கொடியேற்றுகின்ற முறையிலே சில சித்தாந்த உண்மைகளைக் கூறும் சிறிய நூலாகும் இது.

நெஞ்சு விடுதூது

தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களில் தூது ஒன்று. ஆசிரியர்பால் நெஞ்சினைத் தூதுவிடுக்கும் பான்மையில் இந்நூல் அமைந்து, இப்பெயர் பெற்றது. ஆசிரியர் திருவள்ளுவரை நூலில் போற்றுகிறார்.

உண்மை நெறி விளக்கம்

ஆறு விருத்தப் பாக்களில் 'தசகாரியம்' என்று சைவ சித்தாந்த சாத்திரத்துள் கூறப்படும் பத்தையும் இந்நூல் விளக்குகிறது.

சங்கற்ப நிராகரணம்

புறச் சமயத்திற்கும் சைவ சமயத்திற்கும் உள்ள வேறு பாட்டினைப் புலப்படுத்தி, புறச்சமயக் கருத்துகளை இந்நூல் மறுத்துரைக்கின்றது.

இதுகாறும் கூறப்பட்ட இப் பதினான்கு சாத்திரங்களும் சைவ சித்தாந்த உண்மைகளைத் தெளிவாக விளக்கி நிற்கின்றன.