பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

தமிழ் இலக்கிய வரலாறு


வியல், செய்யுளியல், மரபியல் நான்கு இயல்களுக்கு மட்டுமே இவர் உரை இப்பொழுது கிட்டுகின்றது. இவர் குறுந்தொகைக்கும் உரை எழுதினார் என்பர். கோவை நூல்களில் சிறப்புடைத்தாய் 'இராசக் கோவை' என்று கூறப்படும் மணிவாசகப் பெருமான் அருளிச்செய்த திருக்கோவையாருக்கு இவர் அழகியதோர் உரையினைச் செய்துள்ளார். இதனால், இவரைச் சைவர் என்பர். இவர் வறுமை என்பதற்குப் ‘போகம் துயக்கப் பெறாத பற்றுள்ளம்’ என்று உரையெழுதிய பான்மை சிறப்புடையதாகும்.

சேனாவரையர்

இந்த வடமொழிப் பெயருக்குத் தமிழில் இயைந்த பொருள், 'படைத் தலைவர்' என்பதாம். மயிலை நாதர் தம் நன்னூல் உரையில் சிறப்பாற் பெறும் பெயருக்கு இவர் பெயரை உதாரணம் காட்டுகிறார். 'ஆற்றூர்ச் சேனா வரையர்' என்று சாசனத்தில் பெயர் காணப்படுகிறது. இவர் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குத் திட்பமான ஒரு செவ்விய உரையினைச் செய்துள்ளார். இவருடைய உரையே ஏனையோர் உரைகளிலும் சிறந்து, பலராலும் பயிலப்பட்டும் வருகிறது. சொல்லதிகாரத்திற்கு எழுந்த இவருடைய உரை 'சேனா வரையம்' என்றே குறிக்கப்படும் பான்மை இவருடைய சிறப்பினை உணர்த்தும், 'வடநூற் கடலை நிலைகண்டுணர்ந்த சேனாவரையர்' என்று இவர் வழங்கப்படுவதற்குத் தகுந்தாற் போன்று, வடநூற் கருத்துகளையொட்டிச் சில இடங்களில் தமிழிலக்கணம் கூறுகிறார். இவர் காலம், பதின்மூன்றாம் நூற்றாண்டின் பின்பகுதியாகும்.

நச்சினார்க்கினியர்

'உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்' என்ற புகழுரையே இவருடைய உரையின் சிறப்பை விளக்கப் போதிய சான்றாகும். இவரது உரை விரிந்தும் விளக்கமாயும் காணப்படுகிறது. இவர் உரையாசிரியர்கள் இடையில் சிறந்த இடத்தைப் பெறுகிறார். ஒரு பாடலை எடுத்துக்