பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயக்கர் காலம்

193


கொண்டு. இடையில் ஒடித்து, முன்னும் பின்னும் கொண்டு கூட்டிப் பொருள் உரைத்தல் இவர் தம் உரை நெறியாகும். சேனாவரையர் உரையாசிரியரை மறுப்பது போலவே, இவர் சேனாவரையரைச் சொல்லதிகாரத்தின் உரையில் மறுத்துரைக்கிறார். இவர் உரை 'நச்சினார்க்கினியம்' எனப்படும். தொல்காப்பியம், பத்துப்பாட்டு. கலித்தொகை, சீவக சிந்தாமணி என்னும் நூல்களுக்கு இவர் அரியதோர் உரை செய்துள்ளார். குறுந்தொகைப் பாடல்களுக்கு இவர் கண்டதாகக் கூறப்படும் உரை கிட்டவில்லை. “பாலைத் தன்மையாவது, காலையும் மாலையும் நண்பகலன்ன கடுமை கூரச் சோலை தேம்பிக் கூவல் மாறி நீரும் நிழலுமின்றி, நிலம் பயந்துறந்து, புள்ளும் மாவும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம் பெறுவது" என்று பாலையின் தன்மையினைப் பாங்குறப் புலப்படுத்தும் அழகு இவர் உரைமாட்சியின் நுட்பத்தினைப் புலப்படுத்தும். இவர் தம் உரையைப் பற்றித் தவத்திரு டாக்டர் பவர் என்பவர் பின்வருமாறு கூறுகின்றார்: “ஐரோப்பியர்களின் உரை விளக்கம் போன்று இவர் உரை அமைந்துள்ளது. மூலப்பகுதியை விளக்கி வரைகிறார்; இலக்கணச்சிறப்பினை எடுத்துக் காட்டுகிறார்; தொல்காப்பியச் சூத்திரத்தைத் தம் உரை முழுவதிலும் மேற்கோள் காட்டுகிறார்; முக்கியமான தொடருக்கு விளக்கம் தருகிறார். இவர் காலத்து வழங்கிய பாடபேதங்களைக் குறிப்பிடுகிறார். இவருடைய நடையமைப்பு சுருங்கியும், உரைநடைப்போக்கு உயர்ந்தும் காணப்படுகின்றன. வகைப்படுத்தலின் சிறப்பை உணர்த்துவனவாய் உரை அமைந்துள்ளது.[1]

த.- 13


  1. His (Nachinarkiniar's) Comments are very much on the plan of European annotators. He paraphrases the text and points out grammatical peculiarities. He quotes Tholkappia Sutrams throughout, explains obsolete terms, and gives the various readings which existed in his day but his style is condensed and his language pedantic. His productions, however show great powers of analysis Rev. Dr. Bower.