பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

தமிழ் இலக்கிய வரலாறு


கொத்தும் சுமந்த பசுஞ்சாலிக்
குளிர்முத் தினுக்கு விலையுண்டு;
கொண்டல் தருநித் திலந்தனக்குக்
கூறுந் தரமுண் டுன்கனிவாய்

முத்தந் தனக்கு விலையில்லை;
முருகா! முத்தந் தருகவே
முத்தஞ் சொரியும் கடலலைவாய்

முதல்வா! முத்தந் தருகவே.

பிள்ளைத்தமிழ் நூல்களைப் படிப்போர், அந்நூல்களின் சொற்சுவை, பொருட்சுவை, கருத்தாழம், சந்த நயம், வளமான கற்பனை, உவமை அலங்காரங்களில் தம் நெஞ்சத்தைப் பறிகொடுப்பர் என்பது உறுதி.

சிவப்பிரகாச சுவாமிகள்

வீரசைவ சமயத்தைச் சார்ந்த இவர், தொண்டை நாட்டுத் துறைமங்கலம் என்னும் ஊரினர். தருமபுர ஆதீன வித்துவான் வெள்ளியம்பலத் தம்பிரானிடம் கல்வி பயின்றார். அவர் விரோதியினை வென்று, திருச்செந்தூர் முருகன் மீது, 'நீரோட்டக யமக அந்தாதி' பாடினார். இதழ்கள் ஒன்றோடு ஒன்று பொருந்தாமல் வரும் சொற்களை அமைத்துப் பாடப் பெறுவது இந் நூலின் தனிச்சிறப்பாகும்.

இவர் பாடிய நூல்கள்

சைவ சித்தாந்த சமயத் தலைவராய் விளங்கிய அடியவர் பெருமையினை இவர் 'நால்வர் நான்மணி மாலை'யில் புகழ்ந்துரைக்கின்றார். மாணிக்கவாசகப் பெருமாளின் திருவாசகத்தைப்பற்றி இவர் கூறும் கருத்தினைக் காண்க: