பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நாயக்கர் காலம்

225


'திருவாசகமிங் கொருகா லோதின்
கருங்கன் மனமும் கரைந்துகக் கண்கள்
தொடுமணற் கேணியிற் சுரந்து நீர் பாய
மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
அன்ப ராகுன ரன்றி

மன்பதை யுலகில் மற்றைய ரிலரே.'

இவர் வீரசைவத்தின் பெருமையினை விளக்கும் அரிய காப்பியமாம் 'பிரபுலிங்க லீலை' என்னும் ஓர் அரிய நூலினைச் செய்துள்ளார். இந் நூலில் சிவப்பிரகாசரின் கற்பனை வளத்தினையும் சொற்பொருள் நயத்தினையும் காணலாம். நீதி நூல்களில் ஒன்றாய்த் திகழும் 'நன்னெறி'யும் இவர் இயற்றியதே. திருவண்ணாமலை அருணாசலேசுவரரைக் குறித்து எழுந்த நூல் "சோணசைல மாலை'யாகும். 'மந்திரிக்கோவை' என்று திருக்கோவையார்க்கு அடுத்த நிலையிலே வைத்து எண்ணப்படும் 'திருவெங்கைக் கோவை' இவரது படைப்பேயாகும்.

இவர் தாழை நகரிலே பிறந்தார் என்றும், இராதா நல்லூரிலே பிறந்தார் என்றும் இருவேறு வகையாகக் கூறுவர். இவர் திருவண்ணாமலையில் உறையும் இறைவனைப் பற்றி அருணாசல புராணமும், அருணைக் கலம்பகமும் செய்துள்ளார். மேலும் இவர், திருவெண்காட்டுப் புராணம், திருச்செங்காட்டங்குடிப் புராணம், திருவிரிஞ்சைப் புராணம் முதலிய புராணங்களையும், 'செளந்தர்ய லகரி' என்னும் நூலுக்கு ஓர் உரையையும் இயற்றியுள்ளார். இவர்,

'சைவத்தின் மேற்சமயம் வேறிலை அதிற் சார்சிவமாம் தெய்வத்தின் மேற்றெய்வம், இல்லெனும் நான்மறைச்

செம்பொருள்வாய்

மைவைத்த சீர்திருத் தேவார மும்திரு வாசகமும்

உய்வைத் தரச்செய்த நால்வர்பொற் றாள் எம் உயிர்த்

துணையே.'

த.-15