பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நாயக்கர் காலம்

227


தொட்டாலும் கைமணக்கும்; சொன்னாலும்
வாய் மணக்கும்; துய்ய சேற்றில் நட்டாலும்
தமிழ்ப் பயிராய் விளைந்திடுமே

பாட்டிலுறு நளினந் தானே'

படிக்காசுப் புலவர் புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம், சிவந்தெழுந்த பல்லவனுலா, சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத் தமிழ். உமைபாகர் பதிகம், பாம்பலங்காரர் வருக்கக்கோவை முதலிய நூல்களையும் பாடியுள்ளார்.

நல்லாப்பிள்ளை

தொண்டை நாட்டில் மதலம்பேடு என்னும் ஊரிலே பிறந்த இவர், தமிழ், தெலுங்கு, வடமொழி ஆகிய மொழிகளில் தேர்ந்த புலமை பெற்று விளங்கினார். வில்லிபுத்தூரார் பாரதத்திற்கு மேலும் பத்தாயிரம் பாடல்களை எழுதிச் சேர்த்தார். இதுவே 'நல்லாப்பிள்ளை பாரதம்' என வழங்கப்படுவது. இவ்வாசிரியர் மூவாயிரம் பாடல்கள் கொண்ட தேவயானைப் புராணமும் செய்துள்ளார்.

தத்துவப் பிரகாசர்

இவர் போலிப் புலவர்களைக் கண்டித்து ஓர் அழகிய பாடலைப் பாடியுள்ளார்.

'குட்டுதற்கோ பிள்ளைப்பாண்டியனிங் கில்லை
குறும்பியள் வாய்க் காதைக் குடைந்து தோண்டி எட்டினமட்டறுப்பதற்கோ வில்லி யில்லை
இரண்டொன்றா முடிந்து தலை யிறங்கப் போட்டு வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்த னில்லை
விளையாட்டாக் கவிதைதனை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைக ளுண்டு

தேசமெங்கும் புலவரெனத் திரிய லாமே.'

தாயுமானவர்

இக் காலத்தில் சமயத்துறையில் தெளிந்த அறிவினைப் பெற்று ஒளிவீசித் திகழ்ந்த தாயுமான சுவாமிகள் வாழ்ந்