பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

தமிழ் இலக்கிய வரலாறு


தார். இவர் தந்தையார் பெயர் கேடிலியப்பப் பிள்ளை . தாயார் பெயர் கஜவல்லி அம்மை என்பதாகும். திருமறைக் காட்டிலே சைவ வேளாளர் குடியிற் பிறந்து, மெளன குருவிடம் கல்வி பயின்ற இவர், வடமொழி தென்மொழி இரண்டிலும் புலமை பெற்றுத் திரிசிரபுரத்தில் விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம் வேலையில் அமர்ந்து, பின்னர்த் துறவு பூண்டார். யோக ஞானங்களில் சிறந்த இவர், சைவ சமய உண்மைகளையும், சிந்தாந்தக் கொள்கைகளையும் தம் பத்திப் பாடல்களில் தெளிவாக உணர்த்துகின்றார். 'எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே' என்ற உயர்ந்த குறிக் கோளில் பரந்துபட்ட மனப்பான்மையில் வாழ்ந்த பெரியார் இவர்: உறவினரின் வற்புறுத்தலால் மட்டுவார் குழலி என்னும் மங்கையைத் திருமணம் செய்துகொண்டு, சில காலம் வாழ்ந்தார். கனகசபாபதி என்று தமக்குப் பிறந்த மகவுக்குப் பெயரிட்டார். பின்னர்த் துறவறத்தை மேற்கொண்டார். 'எந்த எந்த விதமாக உணர்ச்சி ததும்பும் பாடல்களை இயற்ற இயலுமோ அந்த அந்த விதமாகத் தாயுமானவர் இயற்றியிருக்கிறார் என்று கூறலாம்.'[1] இவரது சமயக்கருத்தின் சாரம், 'ஆனந்தக் களிப்பு' என்னும் பகுதியிற் புலப்படுகின்றது. 'நெஞ்சகமே கோயில்; நினைவே சுகந்தம்: அன்பே மஞ்சன நீர்; பூசை கொள்ள வாராய் பராபரமே' என்னும் பராபரக் கண்ணிப் பாடல்கள் மிகச்சிறந்து ஒளிவீசித் திகழ்கின்றன.

இசுலாமியப் புலவர்கள்

கி. பி. பதினான்காம் நூற்றாண்டு வரையிலும் தென்னிந்தியா இசுலாமியர் படையெடுத்து வெல்லப்படாத


  1. டாக்டர் சி. பி. ராமசாமி ஐயர், கலைக்களஞ்சியம் 5 ஆம் தொகுதி, ப. 582,