பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

தமிழ் இலக்கிய வரலாறு


நாற்பது பாடல்கள் கொண்டதாய் உள்ளது. இவருடைய செய்யுள்களை, வெண்பாக்கள், விருத்தங்கள், கண்ணிகள் என்ற மூன்றனுள் அடக்கலாம். நிராமயக்கண்ணி, தாயுமானவரின் பராபரக்கண்ணியை ஒத்துள்ளது. இவருடைய சிறப்பினைப் பாராட்டிப் புகழும் வகையில் அய்யாசாமி முதலியார் என்பவர், 'குணங்குடி நாதர் பதிற்றுப்பத்தந்தாதி' என்னும் நூலைச் செய்துள்ளார்.

கல்விக் களஞ்சியப்புலவர்

இவர் சின்னச் சீறாப்புராணம், சித்திரக் கவித்திரட்டு என்னும் இரு நூல்களையும் இயற்றியுள்ளார்.

நாயக்கர் காலத்தில் எண்ணற்ற பல நூல்கள் இயற்றப்பட்டன. அவை பலவிதப் போக்குகள் கொண்டவை. பல புதிய துறைகள் இலக்கியத்தில் படைக்கப்பட்டன. இவ்வாறு நாயக்கர் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்புடையதாயுள்ளது.