பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தமிழ் இலக்கிய வரலாறு

யிருக்கிறார்.[1] "ஆற்றல் மிக்கதாகவும், சொல்லவந்த பல கருத்துகளைச் சில சொற்களால் புலப்படுத்துவதாகவும், தமிழ் மொழிபோல் வேறு எம்மொழியும் இல்லை” என்று பெர்சிவல் பாதிரியார் கூறுகின்றார். [2]

'திரமிளம்' என்ற சொல்லிலிருந்தே தமிழ் பிறந்தது என்பர். இக்கருத்து, கால்டுவெலுக்கு உடன்பாடானது. ஆனால், தமிழ் என்னும் பழஞ்சொல்லிலிருந்தே திரமிளம், திராவிடம் போன்ற சொற்கள் தோன்றியிருக்க வேண்டு மென்பதே மொழி நூலார் பலர் கூறும் உண்மையாகும். தமிழ் எனும் சொல் இனிமை எனும் பொருள் பயப்பதை நந்தமிழ் இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன.

'தமிழ் தழீஇய சாய லவர்'

- சீவக சிந்தாமணி

'தமிழெனும் இனிய தீஞ்சொற் றையல்'

- மணிமேகலை

'தமிழ்பாட் டிசைக்கும் தாமரையே'

- கம்ப ராமாயணம்

'இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்'

- பிங்கலந்தை

'பாலேய் தமிழ்'

- திருவாய்மொழி


'அனுமான் சீதாப்பிராட்டியிடம் தூது சென்றபோது மதுரமான மொழியில் பேசினான்' என்று வால்மீகி முனிவர் சுந்தர காண்டம் சுருக்கம் 30, சுலோகம் 43ல் எழுதியிருப்

  1. Tamil is the most highly cultured language and possessos the richest stores of indigenous literature.
    -Max Muller
  2. No language combines greater force with equal brevity than Tamil and it may be aserted that no human speech more close and philosephic in its expression as an exponent of the mind than the same. Thus sequence of thing, of thought, action and its results is always maintained inviolate.
    - Rev Percival