பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

தமிழ் இலக்கிய வரலாறு


பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்

பாரை உயர்த்திட வேண்டும்'

என்பது பாரதியாரின் அடங்காத ஆவல்.

மேனாட்டுக் கவிஞர் மில்டன் மலையைக் காண்கிறார். அவருக்கு அம் மலையினை மேகம் தங்கும் இடமாகவே கருத முடிகின்றது.

‘Mountanis on whose barren breast

The labouring clouds do often rest'[1]

ஆனால் பாரதியார் அதே மலையைக் காண்கிறார். எவ்வாறு?

'காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்குந் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை

நோக்க நோக்கக் களி யாட்டம்.'

பாரதியார் கையாளும் உவமை, நயம் நிறைந்தது.

'கண்ணிரண் டும் விற்றுச் சித்திரம் வாங்கிடில்

கைகொட்டிச் சிரியாரோ?'

என்ன அழகான உவமைச் சித்திரம் பாருங்கள்!

'தனியொருவனுக் குண வி லையெனில்

ஜகத்தினை அழித்திடுவோம்'

என்ற அடி பாரதியாரின் மார்க்சீயப் புரட்சியாகும்; அதே நேரத்தில் இலக்கியப் புரட்சியுமாகும்.

பராசக்தியைப் பரவிக் 'காணி நிலம்' வேண்டிய கவிஞர், 'பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்' என்கிறார்.

'நிமிர்ந்து நன்கூட நேர்கொண்ட பார்வையும்

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,

  1. John Milton's Lallegro-Lines, 73-74