பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

263


'திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்'.

பாரதியார் கண்ட புதுமைப்பெண் இத்தன்மையவளே.

பாப்பாப் பாட்டில், பாரதியார் குழந்தையே ஆகிவிடுகின்றார்; வாழும் முறையினை எத்துணை எளியதாகக் கூறுகின்றார்!

'உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்.
வயிர முடைய நெஞ்சு வேணும்;- இது

வாழும் முறைமையடி பாப்பா!"

கண்ணம்மா. காதலன் கண்ணனைத் துறந்து பிரிவாற்றாமல் வருந்துகிறாள். பாரதியார் பாட்டிலே சோகம் இழையோடுகிறது. ஒருவாறு ஆறுதலும் பெறுகிறாள் தலைவி.

'தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்து விட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த

வைய முழுதுமில்லை தோழி!'

பாரதியார் பாடலிலே, காலையிலே கதிரவன் 'புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கித்' தோன்றுகின்றான். மற்றும் நாட்டு மக்களுடைய ஒற்றுமை வாழ்வினை விளக்க அரியதொரு சித்திரமே தீட்டிவிடுகின்றார்.

'சிந்து நதியின்மிசை நில வினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டி விளையாடி வருவோம்'

'உள்ளத்தே உண்மையொளி யுண்டாயின்

வாக்கினிலே ஒளியுண்டாகும்.'

என்ற அவருடைய வாக்கிற்கு அவரே இலக்கியமாய்த் திகழ்கிறார். வசனத்தை முதன் முதலில் கையாண்ட ஒருசிலரில்