பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

271


என்னும் கவிதை இலக்கணம் அவருடைய பாடல்களிலேயே அமைவுற - அழகுற - அமைந்து கிடப்பது சிறப்புடைத்தன்றோ?

கவிமணியின் அற்புதப் படைப்பு 'ஆசிய ஜோதி'யாகும். அர்னால்டு எழுதிய 'லைட் ஆப் ஏசியா' (Light of Asla) என்ற கவிதையின் தழுவல் என்று இதனைப் படித்தவர் சொல்ல மனம் ஒப்பாத அளவுக்கு மொழியாக்கம் அமைந்துள்ளது; மகனை இழந்த தாய் ஒருத்தி வருந்துகிறாள். துன்பத்தைக் கொட்டுகிறாள்; துன்ப அலைகளின் மோதலைக் கவிதையில் வடிக்கிறார் கவிமணி:

'வாய்முத்தம் தாராமல் மழலையுரை யாடாமல்
சேய்கிடத்தல் கண்டெனக்குச் சிந்தைதடு மாறுதையா!
................................................
பின்னி முடிச்சிடம்மா பிச்சிப்பூ சூட்டிடம்மா

என்னும் மொழிகளினி எக்காலம் கேட்பனையா?'



'ஆழி சூழும் உலகாளும் அரசனாக வேண்டுமெனில்
வாழும் வாழ்வில் உன்னையும் நீ மறந்து வாழ வேண்டுமடா
ஏழை யாகி எளியவரின் எளிய னாக வேண்டுமடா;

தோழ னாகி யாவர்க்கும் தொண்ட னாக வேண்டுமடா.'

என்ற கவிமணியின் பாடலைப் படிக்கும்போது, அது பாரசீகப் பாடலின் மொழிபெயர்ப்பு என்ற எண்ணமே நமக்கு எழுவதில்லை. நம் நாட்டுத் தாயுமானவரின் பாடலைப் படிப்பது போல, அப்பர் தேவாரத்தைப் படிப்பது போல, நம்மை மறந்து படித்து இன்ப அமைதி உறுகிறோம். எண்ணிப் பார்த்தால், கவிமணி பாரசீகப் பாடல்களை மொழிபெயர்த்தார் என்று சொல்வதைவிட, சிறந்த தமிழ்ப் பாடல்களில் திளைத்து வளர்ந்த அவருடைய கவிதையுள்ளம் பாரசீகப் பாடல்கள் சிலவற்றைப் படித்தபோது