பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

தமிழ் இலக்கிய வரலாறு

அவற்றில் ஒத்த கருத்துகளைக் கண்டு மலர்ந்தது என்று கூறலாம். [1]

உமார் கய்யாம் பாரசீக மொழியில் பாடிய பாடலைப் ‘பிட்ஸ்ஜிரால்ட்’ என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதனைக் கவிமணி தமிழில் ஆக்கியுள்ளார். இரண்டனையும் கண்டால், கவிமணியின் கவிதைச் சிறப்புத் தெற்றெனப் புலப்படும். ஆங்கிலம்:

"Here with a loaf of bread beneath the bough
A flask of wine, a book of verse and Thou
Beside me singing in the wilderness

And wilderness is Paradise enow.'

தமிழ்:

‘வெய்யிற் கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு தெய்வ கீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு வையந் தருமிவ் வனமன்றி

வாழும் சொர்க்கம் வேறுண்டோ ?’

இதனைச் சாதாரண மொழிபெயர்ப்பு என மனம் ஒருப்படவில்லை.

உமார் கய்யாம் பாடலில் அழகிய- கருத்தாழம் நிறைந்த பாடல் ஒன்று வருமாறு:

'எழுதிச் செல்லும் விதியின்கை
எழுதி எழுதி மேற்செல்லும்;
தொழுது கெஞ்சி நின்றாலும்

சூழ்ச்சி பலவும் செய்தாலும்

  1. டாக்டர் மு. வரதராசன், வாடாமலர், கவிமணி நினைவு மலர் ப. 36-37