பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

273


வழுவிப் பின்னாய் நீங்கியொரு
வார்த்தை யேனும் மாற்றிடுமோ?
அழுத கண்ணீ ராறெல்லாம்

அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?'

- உமார் கய்யாம் : 63

"கவிமணியின் குழந்தைப் பாடல்களில், இனிய சந்தமும் எளிய பொருளமைப்பும் காணலாம்.

'தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு - உடன்

அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி.'

பின்வரும் பாட்டில் பெண்ணின் பெருமையினைக் கூறுகிறார்:

'மங்கைய ராகப் பிறப்பதற்கே - நல்ல
மாதவஞ் செய்திட வேண்டும் அம்மா!
பங்கயக் கைநலம் பார்த்தலவோ - இந்தப்

பாரில் அறங்கள் வளரும் அம்மா.'

மேலும் கவிமணி அவர்கள்,

'அன்பினுக் காகவே வாழ்பவரார்- அன்பில்
ஆவியும் போகத் துணிபவரார்?
இன்ப உரைகள் தருபவரார்? வீட்டை

இன்னகை யால்ஒளி செய்பவரார்?'

என்று பெண்ணின் பெருவாழ்வினைப் படம்பிடித்துக் காட்டுகின்றார்.

'வாழ்க்கைத் தத்துவங்கள்' என்ற தலைப்பில் இவர் பாடியுள்ள பாடல்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிறப்புடையனவாகும்;

'நாமே நமக்குத் துணையானால்
நாடும் பொருளும் நற்புகழும்
தாமே நம்மைத் தேடிவரும்;

சற்றும் இதற்கோர் ஐயமுண்டோ?'

த - 18