பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

தமிழ் இலக்கிய வரலாறு


நெஞ்சிற் கருணை நிறைந்தவர்க்கு
நேயம் கொண்ட நெறியோர்க்கு
விஞ்சும் பொறுமை யுடையவர்க்கு
வெல்லும் படைகள் வேறுளவோ?
'உள்ளந் தேறிச் செய்வினையில்
ஊக்கம் பெருக உழைப்போமேல்
பள்ளம் உயர்மே டாகாதோ!
பாறை பொடியாய்ப் போகாதோ?
'சாதி சாதி என்றுநிதம்
சண்டை போட்டு மண்டைகளை
மோதி மோதி உடைப்பதொரு
மூடச் செயலென் றுணரீரோ!
'வாட்டும் உலகில் வழுத்தறிய
வாழ்க்கைத் துணையாம் மங்கையரை
ஆட்டும் பொம்மை அடிமைகளாய்
ஆக்கி வைப்ப தழகாமோ?
'கால நதியின் கதியதனில்
கடவுள் ஆணை காண்பீரேல்
ஞாலமீது சுகமெல்லாம்

நாளும் அடைந்து வாழ்வீரே'.

'கவிமணி, ஒரு முழுமணி; தமிழகம் தழைக்க வந்த தவமணி' என்று கூறுவதில் தடையுமுண்டோ?

பாரதிதாசன்

அறிவுக் கோயிலைக் கட்டி அதில் நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞர் பாரதிதாசன்,[1] பாரதிதாசனின் தமிழ்ப் பற்றுக்கு எல்லையில்லை. அவர்தம் பாடல்களைப் படிக்கின்ற அந்நியனும் தமிழனாகிவிடுவான் [2]. பாரதிதாசனாருடன் பழகுவதன் மூலம் 'பாரதியைப் பார்க்கவில்லையே? அவருடன் பழகவில்லையே?' என்ற குறை எனக்கு நிவர்த்தி


  1. புதுமைப்பித்தன்.
  2. டாக்டர், அ. சிதம்பரநாத செட்டியார்