பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

275

யாயிற்று.[1] 'எனக்குக் குயிலின் பாடலும், மயிலின் ஆடலும். வண்டின் யாழும், அருவியின் முழவும் இனிக்கும். பாரதிதாசன் பாட்டும் இனிக்கும்.[2] பாரதிதாசன் கவிதையில் வேகம் உண்டு; விடுதலைத் தாகம் உண்டு. பண்பும் உண்டு. பயனும் உண்டு. [3] பாரதியார் சொல்லும் வீரத் தமிழ்ச்சொல் இன்பத்தைப் பாரதிதாசனின் பாடல்களிற் காணலாம்.[4]

'விடுதலை எல்லாம் கிளர்ச்சியால் வெல்லும்

விடுதலை வேட்கை வெறிகொண்ட வீரன்.[5]

'ஆவேசத்தையும் உணர்ச்சியையும் வெள்ளமாகக் கொட்டும் உயிர்க்கவி பாரதிதாசன்.[6] 'பாரதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு உண்மையான கவி இருக்கிறார். [7] 'உலகெங்கும் உள்ள நவயுகக் கவிஞர்களிலே பாரதிதாசனும் ஒருவர்.[8]

இவ்வாறு பல்வேறு கருத்துகளும் போக்குகளும் கொண்ட அறிஞர் பெருமக்கள் பலரும், பாரதிதாசனின் கவிதைகளைப் பாராட்டிப் பேசுகின்றனர்.

பாரதிதாசன் அவர்கள் 29-4-1891 இல் புதுவையில் கனகசபை முதலியாரின் அருமை மகனாராய்ப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் கனக சுப்புரத்தினம் என்பது. இளமையிலேயே பிரெஞ்சு மொழியிலும், தாய் மொழியாம் தமிழிலும் நிறைந்த புலமை பெற்றுத் தமிழாசிரியராய் அரசினர் கல்லூரியில் பணியாற்றினார். இளமை நாள்களிலேயே சிறுசிறு பாடல்களை எழுதுவார். நண்பர் ஒருவரின் திருமணத்தில், விருந்துக்குப்பின் நம் கவிஞர், பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்தார். பாரதியார் அப் பாட்டைக் கேட்பதை நம் கவிஞர் அறியார். அப் பாடலே அவரைப்


  1. கல்கி
  2. திரு. வி. க.
  3. திரு. ரா. பி. சேதுப் பிள்ளை
  4. பரலி சு. நெல்லையப்பர்
  5. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
  6. வ. ரா.
  7. கு. ப. ரா.
  8. தி. ஜ. ர.