பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

277


காதல் திருமணத்தையும், விதவைகள் மறுமணத்தையும் ஆதரிக்கிறார் புரட்சிக் கவிஞர், பாடல்களில் வேகமும் விவேகமும் காணப்படுகின்றன:

'காதலிருவர்களும் - தம்
கருத்தொருமித்தபின்
வாதுகள் வம்புகள் ஏன்?- இதில்

மற்றவர்க் கென்ன உண்டு?'



'வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ?
பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்

பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ ?'

இளைஞர்களுக்கு ஏற்ற முறையில் நிலவை வருணிக்கும் பொழுது புதுப்பொருள் துலங்கப் புதுப் பார்வையோடு நிலவைக் காண்கிறார் கவிஞர்:

'முழுமை நிலா அழகுநிலா
முளைத்தது விண்மேலே- அது
பழமையிலே புதுநினைவு

பாய்ந்தெழுந்தாற் போலே!'

கவிஞரின் சீர்திருத்த உள்ளம்,

'சாதிமத பேதங்கள் மூடவழக் கங்கள்
தாங்கி நடை பெற்றுவரும் சண்டையுல கிதனை
ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம்; பின்னர்

ஒழித்திடுவோம் புதிதான ஓருலகம் செய்வோம்!'

என்னும் அடிகளில் பளிச்சிடுகின்றது.

மேலும் இவர் 'வலியோர் சிலர் எளியோர்தமைவதையே புரிகுவதா?' என்று வினாக்குரல் எழுப்பி,