பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

தமிழ் இலக்கிய வரலாறு


'காலை குளித்தெழுந்து
கருஞ்சாந்துப் பொட்டுமிட்டு
கருநாகப் பாம்பெனவே
கார்கூந்தல் பின்ன லிட்டுக்
காத்திருந்தேன் உம்வரவைக்

கடைக்கண்ணால் பார்த்திருந்தேன்.'

என்று தொடங்கும் பாடல், இவர்தம் முதற் கவிதையாகும்.

'போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்;
ஏற்றதொரு கருத்தை என து உள்ளம் என்றால்

எடுத்துரைப்பேன்? எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்'

என்பது கவிஞரின் இலட்சியக் குரலாகும்.

இவர் திரைப்படங்களுக்காக எழுதிய பாடல்கள் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவை. திரைப் பாடலுக்கு இலக்கிய மதிப்பை இவர் பெற்றுத் தந்தார். இவர்தம் திரைப் பாடல்கள், 'திரை இசைப் பாடல்கள்' எனும் தலைப்பில் இரண்டு பெரும் தொகுதிகளாக வந்துள்ளன. இது வேறு திரைக் கவிஞர்கள் பெறாத பெரும் பேறு. 'கவியரசு' எனப் போற்றப்பட்ட கண்ணதாசன், அமெரிக்கா சென்றபோது அங்கே 17-10-81 இல் அமரரானார்.

பொதுவுடைமைத் தத்துவத்தில் பூத்த கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் அவர்கள்.

'கவிதை எனக்கொரு கைவாள் - மார்பில்
கவசம் எனக்கொரு வாய்மை
புவியில தீமைகள் வீழ- நான்

போர்செய்யும் ஓர் படை வீரன்'

என முழங்கும் இவர், நாட்டுப்புறக் காதலைப் பின்வருமாறு நயமுற நவின்றுள்ளார்: