பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

தமிழ் இலக்கிய வரலாறு


'கங்குல் இருளின்
கதவைத் திறந்தொரு
கன்னி யெழுந்தாச்சு! காலைப்

பொன்னி வளர்ந்தாச்சு!'

இவர் பாடல்கள் 'தமிழழகன் கவிதைகள்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன.

திரைப்படப் பாடல்களில் கவிதைச் சுவையையும் கருத்தாழத்தினையும் பெய்த மற்றொரு கவிஞர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்.

'செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்
திறமைதான் நமது செல்வம்
கையும் காலுந்தான் உதவி - கொண்ட

கடமைதான் நமக்குப் பதவி'

என்னும் அடிகளில் செறிவான சிந்தனைக்குரிய கருத்தும்,

'மாடா ஒழைச்சவன் வாழ்க்கையிலே- பசி
வந்திடக் காரணம் என்ன மச்சான் ?
'தேடிய செல்வங்கள் வேறே இடத்திலே

சேருவதி னால்வரும் தொல்லையடி!'

என்ற அடிகளில் சமதருமக் கருத்துகளும் விரவி நிற்பதனைக் காணலாம்.

கவிஞர் கோமுகி வேலன் இலக்கியச் செவ்வியும் வளமார் கவிதை நலமும் கெழுமியவர். பழமைப் பாங்கும் புதுமைப் போக்கும் நிறைந்த அற்புதமான கவிதைகளை இவர் படைக்கிறார். சான்றிற்கு ஒரு பாடல்:

'செஞ்சாலி தலை சாய்க்கும்; மஞ்சள் இஞ்சிச்
செழுங்கிழங்கு நிலம்பிளக்கும் கமுகம் சாலை
அஞ்சாறு செம்பவளம் உதிர்க்கும்; தென்னை

அணி அணியாய்ச் செவ்விளநீர் அழகு காட்டும்: