பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298

தமிழ் இலக்கிய வரலாறு

ஈரோடு தமிழன்பன்

திறம் வாய்ந்த இளங்கவிஞர்களில் ஒருவர் ஈரோடு தமிழன்பன். 'பாடசாலை போக வேண்டும் - பாப்பா எழுந்திரு!... செல்லப் பாப்பா எழுந்திரு' என்னும் பாடல், வானொலி, தொலைக்காட்சி மூலம் எல்லார்க்கும் அறிமுகமானது.

நெருப்பு, தானே பேசுவதாக வரும் கவிதை உவமைச் சிறப்புமிக்கது.

'அஞ்சுபொருள் தனில் நான் தான் மற்றோர் கண்டே அஞ்சுபொருள்! ஆண்மை கொண்ட நான்சி வந்தால் எஞ்சுபொருள் எதுவுண்டு? நாக்கால் முத்தம் இடும் போதில் எப்பொருளும் என்னுள் ஒன்றும்.

தமிழன்பன் இலக்கணம் வல்ல பேராசிரியர். அதனால் தமிழ், 'நெஞ்சம் மானம் போக்கும் சிறு செயலை நினைக் காது' என்பதற்கு இலக்கணத்திலிருந்தே இரண்டு உண்மை களை எடுத்துக்காட்டாகத் தருகிறார்.

வினைச் சொல் போய் வேற்றுமையை ஏற்ப தில்லை!
வெண்பாப் போய்ப் பிறதளையை மணப்ப தில்லை! நினைவுயர்ந்த தமிழ் நெஞ்சந் தனது மானம்

நீக்கவருஞ் சிறுசெயலை நினைப்ப தில்லை!

அப்துல் ரகுமான்

'பருப்பில்லாமல் கல்யாணமா'? என்பது பழமொழி. ‘அப்துல் குயில் இல்லாமல் கவியரங்கமா?’ என்பது புதுமொழி. அந்த அளவு கவியரங்கங்களில் கலந்து கொண்டு சொற்சுவை, பொருட்சுவையோடு நகைச்சுவையும் பொருந்தப் பாடுபவர் அப்துல் ரகுமான். அவர் உறுதி பற்றியும் தலைவர் பிறந்த நாள் வாழ்த்தையும் இங்குக் காண்போம்.