பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

209


(உறுதி பற்றி)

பிறப்பதும் பின்னர் பிழைப்பதும் உறுதியால்தான் சிறப்புகள், செயல்கள் விந்தைச் சிந்தனைச் சாதனைகள் பொறிப்பதும் புகழால் வாழ்க்கை புரிவதும் உறுதியால் தான் இறப்பதோ உறுதி தன்னை இவ்வுடல் இழப்பதால்தான்.

(தலைவர் பிறந்தநாள் வாழ்த்து)

திங்கள் பிறப்பினுக்கே- இருள்
தேசங்கள் வாழ்த்துரைக்கும்
கங்குல் பிறப்பினுக்கோ - இளங்
காதலர் வாழ்த்துரைப்பர்!
மங்குல் பிறப்பினுக்கோ - பயிர்
வயல்கள் புகழுரைக்கும்
உங்கள் பிறப்பினுக்கோ - தமிழ்
உலகமே வாழ்த்துரைக்கும்.

தி. கு, நடராசன்

வாழ்க்கைக்கு வள்ளுவர்: 'காதலி'

'இப்படியும் அப்படியும் எப்படியும் வாய்த்தபடி
செப்படி வித்தைப்படி சிறந்தபடி தரைமீதில்
தரமுடியா தபடி தந்தபடி குறளாகும்!
ஒரு நூலில் இரண்டடி உருவாக்கி மூன்று
கருப்பொருளால் நான்காம் வீட்டைக் காட்டி
ஐந்தால் ஆன அகிலத் தினாறே அறமென்று
எந்தமதமும் சம்மதிக்கும் எழுசீர்ப் பாடலுக்குள்
வாய்ப்பால் ஊட்டவரும் வளர்ப்பால் உரம்தரும்
தாய்ப்பால்
செங்கமலப் பூவினிலே வண்டு கொஞ்சும்
சிவந்தோடும் வெள்ளத்தில் மீன்கள் கொஞ்சும்
தங்கமலர்க் காவிலே கிளிகள் கொஞ்சும்

தரைமூடும் கடலினிலே அலைகள் கொஞ்சும்'