பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

311


பூக்களிலே நானும் ஒரு
பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்
பூவாகப் பிறந்தாலும்
பொன் விரல்கள் தீண்ட லையே
பொன் விரல்கள் தீண்டலையே - நான்
பூமாலை ஆகலையே'

என்ற மேத்தாவின் கவிதையும். நா. காமராசனின் கறுப்பு மலர்களில் காணப்படும் சில கவிதைகளும் ஒலிநயம் மிக்குத் திகழ்வதற்குக் காட்டுகளாகும். புதுக்கவிதையில் யாப்பும் ஓசைநயமும் இல்லை என்று கூறுவார் கூற்றை மறுப்பதற்கு இவை சான்றுகளாகும்.

புதுக் கவிதையில் பாடுபொருள்

புதுக் கவிதையின் பாடுபொருள்களாக வாழ்க்கை , சாவு. இணைவிழைச்சுணர்வு, நிராசை, தனிமனித உணர்வுத் தாரை, கவிஞன் தொழில், எழுத்தாளன் தொழில், உவமை, படிமம், உருவகம், கூடார்த்தம் (Obscurity) ஆகியன இடம் பெறுகின்றன.

நடந்தே அழியணும் வழி
கொடுத்தே தீரணும் கடன்
செய்தே அழியனும் வேலை
அழுதே அழியணும் துக்கம்
வாழ்ந்தே முடியணும் வாழ்வு
இதுவே உலகின் நியதி

என வாழ்க்கையைப் பற்றி வல்லிக்கண்ணன் கூறுகிறார்.

புதுக் கவிஞர்களில் 'இன்டலெக்சுவல் கவி' என்று பட்டம் சூட்டப்பெற்ற டி. கே. துரைசாமி, 'இறப்பு' என்ற தலைப்பில் சாவு பற்றி இரண்டு கவிதைகளில் தம் கருத்தை வெளியிடுகிறார்.

ஓலமிடும் நின்னுடுக்கை
ஓலமிடும் நின்னுடுக்கை