பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

தமிழ் இலக்கிய வரலாறு

என்று தொல்காப்பியனார் பொருளதிகாரத்தில் தமக்கு முற்பட்ட இலக்கிய மரபினைக் குறிக்கிறார். புறநானூற்றின் 2- ஆம் பாட்டு, மற்றும் சில பாட்டுகள், தொல்காப்பியத்துக்கு முன்னர் எழுந்திருக்க வேண்டும் என்பர்.

தொல்காப்பியனார் இலக்கணம் கூறும் முறை

முதலில் பொதுவிதி கூறிய பின்னர், சிறப்பு விதியைக் கூறி, அதில் விடுபட்ட இலக்கணங்களைப் புறனடை விதி என்று அடக்கிக் கூறுதல் இவர் மரபு. பிற்கால இலக்கணங்கள் எல்லாம் இவர் கூறும் முறையையே பின்பற்றிச் செல்கின்றன.

தொல்காப்பியத்தின் சிறப்பு

தொல்காப்பியனார் எழுத்ததிகாரத்தில் கூறும் பிறப்பியல் தமிழ்மொழிக்கே சிறப்பாக அமைந்ததோடன்றிப் பிறமொழி ஒலிகளையும் எழுதிக்காட்டும் ஆற்றல் பெற்றது. பல்வேறு ஒலிகளையும் நன்காராய்ந்து இன்ன வின்ன ஒலிகள் சொற்களைத் தொடங்குவன, இன்னின்ன ஒலிகள் சொற்களை முடிப்பன, இன்னின்ன ஒலிக்குப் பின் தான் இன்னின்ன ஒலிகள் வரும் என்றெல்லாம் ஆராய்ந்த பெருமை தொல்காப்பியனாரின் சிறப்பாகும்.[1] 'இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி' என்று கூறப்படும் பாணினி என்ற வடமொழி ஆசிரியரும் இவ்வளவு விரிவாக ஆராய்ந்த தில்லை என்பர்.[2]

தொல்காப்பியனார் சமயம்

தொல்காப்பியனார் சமணர் என்பர் திரு. வையாபுரிப் பிள்ளை. டாக்டர் பர்னர் என்பவர், 'ஐந்திரம் நிறைந்த


  1. திரு. பா. வே. மாணிக்க நாயகர், தொல்காப்பியம் ஒலியியல் ஆராய்ச்சி.
  2. திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை , தமிழின் மறுமலர்ச்சி , ப. 72.