பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360

தமிழ் இலக்கிய வரலாறு


குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதாக நாவல்களை எழுதி வந்தார். சுஜாதாவும் இதே பாணியில் கணேஷ் என்னும் வழக்கறிஞரை உருவாக்கித் தம் துப்பறியும் நாவல்களை உலவ விட்டுள்ளார். கணேஷுக்குத் துணைவனாக வஸந்த் என்னும் இளைஞனைப் படைத்துள்ளார். வஸந்த், நகைச்சுவையும் பாலுணர்வு மிகையும் பெற்ற பாத்திரம். இவ்விருவரையும் கொண்டு சுஜாதா எழுதிய நாவல்களின் 'கொலையுதிர்காலம்', 'அனிதா இளம் மனைவி', 'காயத்திரி' ஆகியன சிறந்தன. இன்றைய கல்லூரி மாணவ மாணவியரிடையே கணேஷும், வஸந்தும் அன்றைய ஷெர்லக் ஹோம்ஸ் போலப் பிரபலமானவர்களாக, பிரியத்துக்குரியவர்களாகத் திகழ்கிறார்கள்.

சுஜாதா அறிவியல், பொறி இயலில் வல்லவர். அதனால் அவ்வியல்களின் நுட்பங்களை வெளிப்படுத்தும் வகையில் தம் நாவல்களை அமைக்கிறார். 'நிர்வாண நகரம்' நாவலில், ஆப்செட் அச்சுமுறை எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், 'பெண் இயந்திரம்' நாவலில் கம்பியூட்டர் எவ்வாறு இயங்குகிறது என்பதையும், 'காகிதச் சங்கிலிகள்' என்னும் குறு நாவலில், சிறுநீரகக் கோளாற்றுக்குத் தரும் மருத்துவ முறை (டையாலிஸிஸ்)யையும் மிக அற்புதமாக விளக்கிச் சொல்கிறார். கணேஷ் பாத்திரம் இடம் பெறாமல் இவர் எழுதிய நாவல்களில், 'கரையெல்லாம் செண்பகப்பூ'. 'கனவுத் தொழிற்சாலை', 'பிரிவோம், சந்திப்போம்', 'வஸந்த் வஸந்த்', 'மூன்று நிமிடம் கணேஷ்' ஆகியன தலை சிறந்தவையாகும்.

சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதத் தொடங்கியவர் சிவசங்கரி. இந்த ஒரு மாமாங்கக் காலத்தில் ஒப்பற்ற புகழைப் பெற்று விட்டார். திரிவேணி சங்கமம், நதியின் வேகத்தோடு, நண்டு, 47 நாட்கள், மெள்ள மெள்ள, பாலங்கள் முதலியன இவருடைய நாவல்களில் சிறந்த சிலவாகும். பெண்ணை வர்ணிப்பதற்கோ, பெண் மனத்தில்