பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

373


தமிழ் நூற் பதிப்புகள்

ஆங்கிலேயர் கொணர்ந்த அச்சு இயந்திரத்தின் பயனாய், ஓலைச்சுவடிகளின் இடத்தினைப் புத்தகங்கள் பற்றின. யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் பெரியபுராணம் போன்ற சைவ இலக்கியங்களைப் பதிப்பித்தார். நன்னூற் காண்டிகையுரையும் அவருடையதே. அவர் சென்னையில் ஓர் அச்சியந்திரசாலையை நிறுவிப் பல நூல்களை வெளியிட்டார். திரு. சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள் உரை. கலித்தொகை, வீர சோழியம் என்னும் நூல்களைப் பதிப்பித்தார். கறையானுக்கு இரையாகி மட்கிக்கிடந்த ஓலைச்சுவடிகளுக்குப் புதுவாழ்வு தந்தவர் டாக்டர் உ. வே. சா. ஆவர். பதிப்பாசிரியரான அவர் பதிப்பித்த நூல்கள் பல; பத்துப் பாட்டு, குறுந்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெருங்கதை, மூவருலா என்பன குறிப்பிடத்தக்கனவாகும். அவரது முன்னுரை, அவர் தம் உழைப்பின் சிறப்பினைப் புலப்படுத்தும். திரு. வ. உ. சிதம்பரம் பிள்ளை தொல்காப்பியத்தைப் பதிப்பித்துள்ளார். திரு. பவானந்தம் பிள்ளை அவர்கள் 'பவானந்தர் கழகம்' நிறுவி, நல்ல பல நூல்களை நாட்டிற்கு வழங்கினார். பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் எண்ணற்ற தமிழ் நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

இலக்கணக் கட்டுரைகள்

சோழவந்தான் அரசஞ்சண்முகனார், திருமயிலை சண்முகம்பிள்ளை, சோமசுந்தரம் பிள்ளை, மறைமலையடிகள். சுன்னாகம் குமாரசாமிப் பிள்ளை ஆகியோர் பல இலக்கணக் கட்டுரைகள் வரைந்துள்ளனர். 'செந்தமிழ்ச் செல்வி' பல இலக்கணக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகின்றது.

உரை நூல்கள்

திரு. கோ. வடிவேலு செட்டியார் அவர்கள் 'திருக்குறள் தெளிபொருள் விளக்கம்' என்னும் நூலில், திருக்குறளுக்குத் -