பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சங்க காலம்

45


பரணர் பாடியது. ஆறாம் பத்து, ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கைப் பாடினியார் பாடியது. ஏழாம் பத்து. செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது. எட்டாம் பத்து, தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறையை அரிசில்கிழார் பாடியது. ஒன்பதாம் பத்து, இளஞ்சேரலிரும் பொறையைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது.

நாட்டின் வளத்தினை வருணிக்கும் புலவர் பின்வருமாறு பாடுகின்றார்:

"தொறுத்த வயலில் ஆரல் பிறழ்நவும்
ஏறு பொருதசெறு உழாதுவித் துநவும்
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்
இருங்கண் எருமை நிரை தடுக் குநவும்
கலிகெழு துணங்கை யாடிய மருங்கின்
வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும்
ஒலிதெங்கின் இமிழ் மருதின்
புனல்வாயில் பூம்பொய்கை

பாடல் சான்ற பயங்கெழு வைப்பு."

மேலும், 'காலமன்றியுங் கரும்பறுத் தொழியாது' என்ற தொடர், சேர நாட்டு வளனைச் சிறப்புறக் கிளத்தும்.

"கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு

விழவறு பறியா முழுவுஇமிழ் மூதூர்"

என்ற பகுதியும் நாட்டு வளத்தினையே விளக்கி நிற்கின்றது.

அரசமாதேவியின் பண்பு நலன்களை,

'ஆறிய கற்பின் அடங்கிய சாயல்
ஊடினும் இனிய கூறும் இன்னகை
அமிர்துபொதி துவர்வாய் அமர்ந்த நோக்கின்

சுடர்நுதல் அசைநடை உள்ளலும் உரியள்'