பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மதுரைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
பெருந்தகை
அமரர் டாக்டர் மு. வரதராசனார்
அவர்கள் அன்புடன் அளித்த


அணிந்துரை


தமிழ் இலக்கியம் தொன்மைச் சிறப்புடையது; ஏறக்குறைய முப்பது நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து அமைந்து வருவது. ஆதலின் இலக்கியம் கற்பவர் அதன் வரலாற்றை அறிதல் இன்றியமையாததாகும். வரலாற்று அறிவு இல்லாமலும் இலக்கியம் கற்கலாம். ஆயின் எந்த நூல் முந்தியது பிந்தியது என்ற தெளிவு பெற்று இலக்கியம் கற்பதால் பெரும் பயன் உண்டு. கற்பனைச் சுவையும் உவமை முதலியனவும் எவ்வெவ்வாறு வளர்ந்துள்ளன என்பதை அறிவதில் இன்பம் உண்டு; புலவர் உணர்த்தும் நல்லுணர்வுகளும் அருங்கருத்துகளும் அவ்வக்காலத்தில் எவ்வெவ்வாறு வளர்ந்துள்ளன என்பதை அறிவதிலும் பயன் உண்டு. ஆதலின் வரலாற்று அறிவு இலக்கிய இன்பத்திற்கு உதவுவதாகும்.

திரு. சி. பாலசுப்பிரமணியம் எம். ஏ.

எழுதிய இந்நூலில், தமிழ் இலக்கிய வரலாறு தெளிவாகவும், செம்மையாகவும், சுருக்கமாகவும் அமைந்துள்ளது