பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1

பல்வேறு காலங்களாகப் பகுத்துக்கொண்ட பாகுபாடும், அவ்வக்காலங்களின் நூல்களைப் பற்றி விளக்கும் அமைப்பும், அறிஞருலகம் ஏற்றுக் கொண்ட முறைகளாகும். நூலாசிரியர் சிலர் தம் காலத்தைப் பொறுத்த வரையில் கருத்து வேறுபாடுகள் உண்டு. வேறுபடும் கருத்துக்களையும் ஆங்காங்கே இவர் குறிப்பிட்டுச் செல்வது பொருந்திய முறையே ஆகும். இலக்கியங்களின் சிறப்பியல்புகளையும் அவற்றிற்குத் தேவையான விளக்கங்களையும் மட்டுமே ஆங்காங்கே தந்துள்ளார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பியல்புகளும் விளக்கங்களும் கற்பவர் நெஞ்சில் எளிதில் பதிந்து இன்புறுத்துவனவாக இருத்தல் பாராட்டத் தக்கதாகும். தொடக்கம் முதல் முடிவு வரையில் நடுவு நிலையில் நின்று, தக்க வரையறை மேற்கொண்டு, அவ்வப் புலவர்க்கும் அவர்தம் படைப்புகளுக்கும் உரிய இடம் தந்து எழுதியுள்ளார். ஆதலின், இந் நூலாசிரியரின் நன்முயற்சி வரவேற்கத் தக்கதாகும்.


மு. வரதராசன்