பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

தமிழ் இலக்கிய வரலாறு


என்ற தொடர் இசையின் ஆற்றலைப் புலப்படுத்தி நிற்கின்றது.

'அற்றம் பார்த் தல்குங் கடுங்கண் மறவர் தாம்
கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர்
துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வௌவலிற்

புள்ளும் வழங்காப் புலம்புகொள் ஆரிடை'

என்று பாலை நிலத்தின் கொடுமை கூறப்படுகிறது.

...................................நும்மொடு
துன்பம் துணையாக நாடின் அதுவல்லது
இன்பமும் உண்டோ எமக்கு?'

'பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதா மென்செய்யும்

நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே'

முதலான அரிய கருத்துகள் பொதிந்த பாடல்கள் உள்ளன. இதிகாசக் கருத்துகளும், குறட்கருத்துகளும் இந்நூலில் இடம் பெறுகின்றன. கலித்தொகையில் நீராடலைப் பற்றிய செய்தியும் கூறப்படுகின்றது. நகைச்சுவை கெழுமிய பாடல்களும் சில உள்ளன.

அகநானூறு

'அகம்' என்ற பெயரமைந்த பழைய இலக்கிய நூல் இஃது ஒன்றேயாகும். இது பல்வேறு புலவர்களால் இயற்றப் பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது. மதுரை உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார் இப் பாடல்களைத் தொகுத்தார். கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். சிவபெருமானைப் பற்றிய பாடல் இது. அகநானூறு, அகம் பற்றிய எட்டுத்தொகை நூல்களில் நீட்சி உடையதாகையால் 'நெடுந்தொகை' எனவும் வழங்குகிறது. அகநானூறு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற் பகுதியான களிற்றியானை