பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலம்

63


'மனத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை
மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து

வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்'
- முல்லை : 59-61

இயற்றிய புலித்தொடர் சங்கிலியும், பாவை விளக்கும் முல்லைப்பாட்டில் இடம் பெறுகின்றன.

'உடம்பின் உரைக்கும் உரையா நாவின்

படம்புகு மிலேச்சர்'

என மிலேச்சர்கள் வருணிக்கப்படுகிறார்கள்.

இப் பாட்டு கருத்தாழம் மிகுந்து, முல்லையின் முதல், கரு, உரிப்பொருள்களைத் திறம்பட வருணிக்கிறது. முல்லைப் பாட்டின் தலைவி, நெஞ்சை ஆற்றி நிற்பதால், 'நெஞ்சாற்றுப்படை' என்றும் பிறிதொரு பெயர் கூறுவர் சிலர்.

மதுரைக்காஞ்சி

பத்துப்பாட்டில் முல்லைப்பாட்டு அடியளவில் சிறியதாய் இருப்பது போல, மதுரைக்காஞ்சி அடியளவில் பெரியதாய் 782 அடிகள் கொண்டு விளங்குகிறது. இடையிடையே வஞ்சியடிகள் பெற்று ஆசிரியப்பாவால் அமைந்துள்ளது. இப்பாட்டு இந்த உலகின் நிலையாமையை அறிவுறுத்தித் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை உயர்நெறிக்கண் செலுத்துவதாய் அமைந்திருக்கிறது. இதனைப் பாடியவர் மாங்குடி மருதனார். இப்பாட்டு, 'பெருகு வளமதுரைக் காஞ்சி' எனப் புகழப்படுகிறது. 'கூடற்றமிழ்' என்ற பெயரும் இம் மதுரைக் காஞ்சிக்கு உண்டு என்பர்.

"கொன்னொன்று கிளக்குவல், அடுபோர் அண்ணல்

கேட்டிசின் வாழி! கெடுகநின் அவலம்!' - 207-8

என்னும் அடிகளில் வீடுபேற்றின் நிமித்தத்தினை உணர்த்தி.