பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலம்

71


பாடிய காமக்கண்ணியார், கீரன் எயிற்றியார், ஒக்கூர் மாசாத்தியார், அள்ளூர் நன்முல்லையார், காவற்பெண்டு, நக்கண்ணையார், நப்பசலையார், நல்வெள்ளியார், பாரி மகளிர், பொன்முடியார், பூங்கணுத்திரையார், பூதப் பாண்டியன் தேவியார் என்போர் எடுத்துக்காட்டாகக் கூறத்தக்கவர் ஆவர்.

பாவலரேயன்றிக் காவலரும் கவிதை யாத்தனர் என்பதைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ, சோழன் நல்லுருத்திரன், ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் முதலானோர் பாடல்களால் அறியலாம். மேலும் கவிதை பாடிய அரசியர்களையும் சங்காலத்தில் நாம் காண்கின்றோம். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் மனைவி, பாரி மகளிர் என்பவர்களைக் குறிக்கலாம்.

அகத்திணையினைப் பாடிய புலவர்கள் உளவியல் தத்துவத்தை நன்கு உணர்ந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். ஆண்பாற் புலவர்கள் பெண்களின் மன உணர்ச்சிகளைப் படம்பிடித்துக் காட்டுகின்றார்கள். அது போலவே பெண்பாற் புலவர்களும் ஆண்களின் மனவுணர்ச்சியினைப் படம் பிடித்துக் காட்டுகின்றார்கள். மேலும், புலவர்கள் வறுமையிலும் செம்மையான வாழ்வு வாழ்ந்து உள்ளனர். "எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே" என்பது ஒளவையார் வாக்கு. 'இன்புற விடுத்தியாயின், குன்றியும் கொள்வல் கூர்வேற்குமண!' என்கிறார் பெருஞ்சித்திரனார் எனும் புலவர். மன்னர்கள் அறநெறி பிறழ்ந்தபோது அஞ்சாது அவர்களை இடித்துரைத்த கோவூர்கிழார் போன்ற பெரும் புலவர்களைக் காண்கிறோம்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் பரந்துபட்ட மனப்பான்மை சங்ககாலத்தே நிலவியது. சமயப் பொறை நிறைந்த காலம் சங்ககாலம். உலோச்சனார் போன்ற சமணப்புலவர்களும், இளம்போதியார் போன்ற