பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

தமிழ் இலக்கிய வரலாறு


னகத்தே தாங்கி நிற்பது குறள் என்னும் கருத்தில் மதுரைத் தமிழ் நாகனார் என்னும் புலவர்,

'எல்லாப் பொருளும் இதன்பா லுள இதன்பால்

இல்லாத எப்பொருளும் இல்லையால்'

என்று சிறப்பாகக் கூறுகிறார். இவை போன்று திருவள்ளுவ மாலையில் காணப்படும் பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்கள் திருக்குறளின் பெருமையினை உரைப்பனவாய் உள்ளன.

திருக்குறள் நான்மறையின் மெய்ப்பொருளை உணர்த்துகிறது என்றும், சுருங்கிய சொற்களால் பொருத்தமுறப் பொருள் விளங்கச் சொல்லுகிறது என்றும், எளிய சொற்களால் அரிய பொருள்களைப் புலப்படுத்துகிறது என்றும், உலக மக்களின் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் இருளை அகற்றும் ஒளிவிளக்கு என்றும் புலவர்கள் பலபடப் பாராட்டிப் புகழ்மாலை சூட்டியுள்ளனர்.

முதற்கண் திருக்குறள் சமயப் பொதுநூலாகக் காட்சியளிக்கிறது. இந் நூலைச் சைவர்கள், வைணவர்கள், பெளத்தர்கள், சமணர்கள், கிறித்தவர்கள் ஆகிய அனைவரும் தத்தம் சமயக் கருத்துகள் குறட்பாக்களில் காணப்படுவதால் தத்தம் சமயத்திற்குரிய நூலே குறள் என்று கூறுவர். எனவே தான் கல்லாடர் என்னும் கவின் தமிழ்ப் புலவர்,

'ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின்
அன்றென்ப ஆறு சமயத்தார் -நன்றென
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்

முப்பால் மொழிந்த மொழி'

என்று பாடியுள்ளனர்.

அடுத்து, திருக்குறள் காலத்திற்குப் பொது நூலாய் வழங்கி வருவதைக் காண்கிறோம். கால வெள்ளத்திற்கு