பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலம்

87

இந் நூல் 'செல்வம் சகடக்கால் போல வரும்' என்று செல்வ நிலையாமையை வற்புறுத்துகிறது. 'கல்வி கரையில கற்பவர் நாள்சில' என்றும், 'கல்லாரே யாயினுங் கற்றவரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளுந் தலைப்படுவர்' என்றும் கல்வியின் சிறப்பினையும் அழகினையும் கவின் பெறக் கூறுகிறது.

காமத்துப்பாலில் கற்புடைப் பெண்டிரைக் கூற வந்த விடத்து,

'கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள்
உட்குடையாள் ஊர்நாண் இயல்பினாள் - உட்கி
இடனறிந்(து) ஊடி இனிதின் உணரும்

மடமொழி மாதராள் பெண்'

என்று குறிப்பிடுகிறார். இந் நூல் இவ்வாறு உலகம் உணர்ந்து ஓதுவதற்குரிய நல்ல நீதிகளை விளக்கி நிற்கிறது.

நாலடியாரில் அமைந்துள்ள இரு வெண்பாக்களில்[1] பெருமுத்தரையர்களைப் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. இப் பெருமுத்தரையர்கள், முதல் பரமேசுவரவர்ம பல்லவனின் பின் வந்தவர்கள் என்றும். அவர்கள் ஆட்சி சிறந்து விளங்கியது கி. பி. ஏழாம் நூற்றாண்டு என்றும் கொண்டு, இந்நூலில் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டின்


  1. பெருமுத்தரையர் பெரிது 'வந்(து) ஈயும் கருணைச் சோ(று) ஆர்வர் கயவர் கருணையைப் "பேரும் அறியார் தனிவிரும்பு தாளாண்மை நீரும் அமிழ்தாய் விடும். - நாலடியர், 200 மல்லல்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம் செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார் நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே செல்வரைச் சென்று இரவா தார். - நாலடியார், 290