பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கம் மருவிய காலம்

95

சங்க மருவிய காலம் 95 - - - என்பவர். இவர், வடமொழியில் இருடிகள் சொல்லிய ஆசார சீலங்களைத் தொகுத்து ஆசாரக் கோவை என்னும் இந்நூலில் கூறுவதாகச் சிறப்புப் பாயிரச் செய்யுளொன்று செப்புகிறது. இவர் காலமும் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டாய் இருக்கலாம் என்பர். கடவுள் வணக்கம், உண்ணல், உறங்கல், உபசாரம், ஒழுகும் முறை முதலிய செய்திகளை இந்நூலில் ஆசிரியர் புலப்படுத்தியுள்ளார். - 1 111 | | பழமொழி இந்நூலின் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒவ்வொரு பழமொழி அமைந்திருக்கின்ற காரணத்தால், இதற்கு இப் பெயர் அமைந்தது. கடவுள் வாழ்த்துடன் நானூறு வெண்பாக்களைக் கொண்ட நீதி நூலாய் இந்நூல் திகழ்கிறது. பழமொழிகளுக்குப் பெயர்போன நாடு நம் தமிழ்நாடு. எனவே, அக்காலத்தில் வழங்கிய பழமொழி களில் சிலவற்றை ஈற்றடியாகக் கொண்டு இந்நூல் அரிய நீ தி க ைள யு ம் உண்மைகளையும் புலப்படுத்துகிறது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே திருக்குறள் நாலடி யாரை அடுத்து, இந் நூலுக்குச் சிறப்பினைத் தரலாம், அரிய வரலாற்றுச் செய்திகள் சில இந்நூலில் அமைந்திருக்கின்றன. முடியுடைய மூவேந்தரைப் பற்றிய செய்திகளும், கடையெழு வள்ளல்களுள் சிலரைப் பற்றிய செய்திகளும், இதிகாசப் புராணக் கதைகளும் இந்நூலில் காணப்படுகின்றன. மேலும், முப்பத்தொன்றாம் பாடலில் பல்யானைச் செல்கெழு குட்டு வனைப் பற்றிய குறிப்பும், இருபத்தொன்றாம் பாடலிலே கரிகாலன் நரைமுடித்து முறை செய்த செய்தியும், நாற்பத் தொன்பதாம் பாடலிலே தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியனைப் பற்றிய செய்தியும், தொண்ணூற்று மூன்றாவது பாடலில் மனுநீதி கண்ட சோழ னைப்பற்றிய செய்தியும், நூற்றிரண்டாவது பாடலிலே பொற்கைப் 11 )