பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

தமிழ் இலக்கிய வரலாறு


இயன்ற மருந்து உடல் நோயைப் போக்கும் தன்மையைப் பெற்றிருப்பதுபோல, இந் நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படும் மூன்று அரிய கருத்துகளும் உளநோயைப் போக்கி உரமூட்டும் தன்மையவாம் என்பர். இந்நூலில் திருமாலைப் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடலுடன் நூற்றொரு பாடல் கள் காணப்படுகின்றன. இதன் ஆசிரியர் நல்லாதனார் என்னும் புலவர் ஆவர். இவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்தவர் என்பர். 'அருந்ததிக் கற்பினார் தோளுந் திருந்திய தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும்- சொல்லின் - அரிதகற்றுங் கேள்வியார் நட்புமிம் மூன்றுந் திரிகடுகம் போலு மருந்து' - என்ற பாட்டும், 'தோள்வற்றிச் சாயினும் சான்றாண்மை குன்றாமை.'-2 'வருவாயுட் கால்வழங்கி வாழ்தல்.' -31 'நெஞ்சம் அடங்குதல் வீடாகும்.' என்னும் தொடர்களும், இந்நூலின் பெருமையை விளக்கப் போதியனவாகும். -43 - - ஆசாரக் கோவை பல்வேறு வெண்பா வகைகளும் விரவி, கடவுள் வாழ்த்துத் தவிர்த்து நூறு பாடல்களைத் தன்னகத்தே கொண்டதாய் இந்நூல் விளங்குகிறது. இந்நூல் மக்கள் அன்றாட வாழ்வில் கொள்ளவேண்டுவன இவை, தள்ள வேண்டுவன இவை என்பதைக் கூறுகிறது. எனவே, இதனை வடமொழிக் கருத்துகள் வழங்குவது போன்றதொரு நூல் என்பர். இந்நூலின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார் 1