பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கம் மருவிய காலம்

93

சங்கம் மருவிய காலம் 'சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென் றெண்ணிப் பிணைமா னினிதுண்ண வேண்டி- கலைமாத்தன் கள்ளத்தின் அச்சும் சுரமென்பர் காதலர் உள்ளம் படர்ந்த நெறி.' - 38 | 1 -- - | IT ஐந்திணை எழுபது இஃது ஒவ்வொரு திணைக்கும் பதினான்கு பாடல் களாக, எழுபது பாடல்கள் கொண்டது; அகப் பொருள் துறைக்கு இலக்கியமாய்க் காட்டப்படும் நல்ல நூல். இந் நூலின் காப்புச் செய்யுள், பிள்ளையார் வணக்கத்தைக் கொண்டிருக்கிறது. அறிஞர் சிலர் பிள்ளையார் வழிபாடு கி.பி.ஏழாம் நூற்றாண்டில் தான் சாளுக்கிய நாட்டினின்றும் இங்கு வந்தது என்று துணிகின்றனர். இந்நூலின் ஆசிரியர் மூவாதியார் என்பவர். இவர் சமண சமயத்தினைச் சார்ந்தவர் என்று சிலர் கூறினும், போதிய அகச்சான்றுகள் இல்லாத காரணத்தால் அதை உண்மை என்று கொள்வதற்கில்லை என்பர். இந்நூலின் முப்பத்தாறாம் பாடலில் காணப்படும் பின்னிரண்டு அடி களும் ஐந்திணை ஐம்பதின் முப்பத்தெட்டாம் பாடலின் பின்னிரண்டடிகளோடு ஒத்துள்ளன. காதலர்ப் பிரிந்த வரிடம் மாலைக்காலம் 'கொலைக்களத்து ஏதிலர் போல' வரும் என்ற குறட்கருத்து. 'புல்லுந ரில்லார் நடுங்கச் சிறுமாலை கொல்லுநர் போல வரும்' என்ற இந்நூலில் ஆளப் பட்டிருக்கிறது. திரிகடுகம் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருள்களும் திரிகடுகம் என்று வழங்கப்படும். இம் மூன்று பொருள்களால்