பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ் இலக்கிய வரலாறு கி. மு. 322-க்கும் இடைப்பட்டதென்பது ஆராய்ச்சியாளர்களது. கருத்து.1 ஆகவே, கடைச்சங்ககாலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண் டெனக் கோடற்குக் காட்டப்பெற்ற ஆதாரங்களுள் ஒன்று வலியற்றொழிந்தமை காண்க. இனி, ' முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்- தென் றிசை மாதிர முன்னிய வரவு' என்று மாமூலனார் மற்றோர் அகநானூற்றுப் பாடலில் கூறியிருப்பது, வடுகரைத் துணை யாகக்கொண்டு மோரியர் தென்னாட்டின் மேல் படையெடுத்த செய்தியைக் குறிப்பிடுகின்றதேயன்றி அவ்வாராய்ச்சியாளர் கருதுவதுபோல் சமுத்திரகுப்தன் 2 படையெழுச்சியை உணர்த்த வில்லை என்பது தேற்றம். மோரியர் படையெழுச்சியைக் குப்தர் படையெழுச்சி என்று அன்னோர் தவறாகக் கருதிவிட்டமையால் கடைச்சங்ககாலம்பற்றி அத்தகைய பிழைபாடு நேர்ந்தது என லாம். குப்தர் காலத்திற்கு ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவர் மோரியர் என்பது வரலாற்றாராய்ச்சியாளர் யாவ ரும் அறிந்ததொன்றாம்.3 குப்தர் என்னும் பெயரே கடைச்சங்க நூல்களில் யாண்டுங் காணப்படாமை குறிப்பிடத்தக்கது. ஆகவே, கடைச்சங்க காலத்திற்கு அவர்கள் காட்டியுள்ள பிறிதோர் ஆதாரமும் தவறாகப்போயினமை அறியற்பாலது. எனவே, கடைச்சங்ககாலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டெனக் கூறுவது எவ்வாற்றானும் பொருந்தாமை காண்க. 1. The Early History of India by Vincent A. Smith, (4th Edition) p.51 - 2. சமுத்திரகுப்தன் என்பான் குப்தர் மரபினனே யன்றி மோரிய மரபினன் அல்லன் என்பது அறியத்தக்கது. 3. மோரியர் என்பார், கி. மு. 322-க்கும் கி. மு. 185-க்கும் இடையில் ஆட்சிபுரிக்தோர் ஆவர். குப்தர்களோ கி. பி. 320 முத கி. பி. 455 வரையில் அரசாண்ட வர்கள். (The Early History of India by Vincent A. Smith, pp. 206, 207 and 295.) எனவே குப்தர்க்கு ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டவர் மோரியர் என்பது தெள்ளிது,