________________
கடைச்சங்கத்தின் இறுதிக்காலம் ஐந்தாம் நூற்றாண்டில்1 தமிழ் நாட்டின் மீது படையெடுத்த நிகழ்ச்சியை அப்புலவர் பெருமானே, ' முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு விண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத் தொண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த அறையிறந் தவரோ சென்றனர்' (அகம். 281) என்ற மற்றோர் அகநானூற்றுப் பாடலில் கூறியுள்ளனர் என்பது. கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த இவ்விரு நிகழ்ச்சிகளையும் தம் பாடல்களில் குறித்துள்ள மாமூலனார் நிலவிய கடைச்சங்கத்தின் இறுதிக்காலமும் அவ்வைந்தாம் நூற்றாண்டாகவே இருத்தல் வேண்டும் என்பது அன்னோர் கொள்கையாகும். அவர்கள் தம்முடிபிற்கு ஏதுவாக எடுத்துக்காட்டிய அக நானூற்றுப் பாடற்பகுதிகள் இரண்டனுள், ' பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்--சீர்மிகு பாடலிக்குழீ இக், கங்கைநீர்முதல் கரந்த நிதியங் கொல்லோ ' என்ற பகுதியின் பொருள், ' பல் வகைப் புகழ் நிறைந்த போர் வெல்லும் நந்தர் என்பார், சிறப்பு மிகுந்த பாடலிபுரத்தில் திரண்டிருந்து கங்கையாற்றின் நீரின் கீழ் மறைத்துவைத்த நிதியமோ' என்பதாம். ஆகவே, அது, பாடலிபுரத்தில் ஆட்சிபுரிந்த நந்தர் என்பார் கங்கைப்பேராற் றின் கீழே பெருநிதியம் ஒளித்துவைத்திருந்த செய்தியை உணர்த்துகின்றதேயன்றி அவர்கள் கருதுவதுபோல் நந்தரது பாடலிபுரம் கங்கை வெள்ளத்தால் அழிந்ததை உணர்த்தவில்லை என்பது நன்கு தெளியப்படும். எனவே, மாமூலனார் பாடலிபுரம் ஆற்றுப் பெருக்கால் அழிந்த நிகழ்ச்சியைக் கூறவில்லை என்பது - தேற்றம். அம் மாநகரில் வீற்றிருந்தரசாண்ட நந்தர், மோரியர்க்கு முற்பட்டவராவர். அவர்கள் ஆட்சிக்காலம் கி. மு. 413-க்கும் 1. . சமுத்திரகுப்தனது தென்னாட்டுப் படையெழுச்சி கி. பி. நான்காம் நூற்றாண்டின் இடையில் நிகழ்ந்தது என்பது சரித்திர ஆசிரியர் களின் கருத்து.