பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ் இலக்கிய வரலாறு கைப்பற்றிய காலத்தில் மதுரையம்பதியில் கடைச்சங்கம் இல்லை என்பது தெள்ளிது. பல்லவர் தமிழ் நாட்டிற் புகுந்து ஆட்சி புரியத் தொடங்கிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியேயாம் என்பது வரலாற்றாராய்ச்சியில் வல்ல அறிஞர்களது கருத்து.1 ஆகவே, மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மதுரையில் கடைச்சங்கம் இல்லை என்றும் அதற்கு முன்னரே அஃது அழிந்திருத்தல் வேண்டும் என்றும் ஐயமின்றிக் கூறலாம். எனவே, கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் அச் சங்கம் - முடிவெய்தியிருத்தல் வேண்டும் என்பது நன்கு வலியுறுதல் காண்க. இனி, கடைச்சங்கத்தின் இறுதிக்காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டாகும் என்று சில ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.2 அன்னோர் கொள்கை பொருந்துமா என்பது ஈண்டு ஆராய்தற் குரியதாகும். அவர்கள் தாம் கண்ட முடிபிற்கு இரண்டு ஆதாரங்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். அவற்றுள் ஒன்று கங்கைக்கரையிலுள்ள பாடலிபுரம் என்னும் மாநகர் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் வெள்ளப்பெருக்கால் அழிவுற்ற செய்தியைக் கடைச்சங்கப் புலவருள் ஒருவராகிய மாமூலனார் என்பார், ' பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலிக் குழீ இக் கங்கை , * நீர் முதல் கரந்த நிதியங் கொல்லோ ' (அகம். 265) என்ற அகநானூற்றுப் பாடலில் குறிப்பிட்டுள்ளனர் என் பது ; பிறிதொன்று, சமுத்திரகுப்தன் - என்பான் கி. பி 1. (a) The Successors of the Satavahanas in Lower Deccata by D. O Sirkar, p.175. (b) The Pallavas by G. J. Dubreuil, p. 10. (0) Administration and Social Life under the Pallavast pp. 6&10 2 திருவாளர் சாவ்சாகிப் மு. இராகவையங்கார் அவர்கள் எழுதிய சேரன் செங்குட்டுவன் என்ற நூலில் செங்குட்டுவன் காலம் என்பதைப் பார்க்க,