பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கடைச்சங்கத்தின் இறுதிக்காலம் புரிந்தான்.1 இச் செய்திகள் எல்லாம் ஆசிரியர் இளங்கோவடி களால் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருத்தல் அறியத்தக்கது. எனவே, கடைச்சங்கத்தின் இறுதிக்காலத்திலிருந்தவன் கடல் சூழ் இலங்கைக் கயவாகுமன்னன் என்பது நன்கு தெளியப்படும். இலங்கையில் கயவாகு என்ற பெயருடன் இரண்டு அரசர்கள் ஆட்சிபுரிந்துள்ளனர் என்பது அந்நாட்டு வரலாற்றாராய்ச்சியாளர் கண்ட முடிபாகும். அவ்விருவருள் முதல் கயவாகு, கி. பி. 171 முதல் கி. பி. 193 வரையில் அரசாண்டவன்.2 இரண்டாம் கயவாகு என்பான், கி. பி. 1137 முதல் கி. பி. 1153 வரையில் ஆட்சிபுரிந்தவன்.3 இவ்விரண்டாங் கயவாகு சோழ இராச்சியத் தில் இரண்டாங் குலோத்துங்க சோழன் அரசாண்ட காலத்தில் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினிடைப்பகுதியில் இருந் தவனாதலின், இளங்கோவடிகளால் சிலப்பதிகாரத்தில் குறிப் பிடப்பெற்றவன் முதற் கயவாகுவே யாதல்வேண்டும் என்பது நன்கு துணியப்படும். எனவே, அம் முதற் கயவாகுவின் கால மாகிய கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதுரைமா நகரில் கடைச்சங்கம் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அச் சங்கப்புலவர்கள் பல்லவரையாதல் அன்னோர் தமிழகத்தில் நிகழ்த்திய போர்களையாதல் தம் பாடல்களில் யாண்டுங் கூற வில்லை என்பது முன்னர் விளக்கப்பெற்றது. எனவே, அவர்கள் தமிழ்நாட்டின்மீது படையெடுத்து வந்து அதன் வட பகுதியைக் 1. இலங்கையிலிருந்து கிடைத்த கண்ணகியின் செப்புப்படிமம் ஒன்று, லண்டன் மாநகரில் பிரிட்டிஷ் பொருட்காட்சிசாலையில் இருந்தது. அது கி. பி. 1830 ஆம் ஆண்டில் அங்குக் கொண்டுபோகப்பட்ட தாம். முதற் கயவாகு தன் நாட்டில் எடுப்பித்த பத்தினிக் கோட் டத்தில் எழுந்தருளுவித்த கண்ணகிதேவியின் படிமமாகவே அஃதிருத்தல் வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின் றனர். அஃது இப்போது இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டது என்று தெரிகிறது. (Selected Examples of Indian Art, Plate 33) 2. The Mahavamsa or the great Chronicle of Ceylon, trans lated by Wilhelm Geiger, Ph, D. Intr- p- 33. + 3. Epigraphia Zeylanica, Vol III, No. 1A Chronologilcal Table of Ceylon Kings.