உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கடைச்சங்கத்தின் இறுதிக்காலம் இனி, கடைச்சங்க காலம் கி. பி. எட்டாம் நூற்றாண் டென்பர் ஒரு சிலர்.1 அன்னோர் தம் கொள்கைக்கு ஆதாரமாக எடுத்துக்காட்டுவன, சிலப்பதிகாரத்தில் இரண்டு இடங்களில் காணப்படும் காலக்குறிப்புக்களும் அவற்றுள், ஒன்றிற்கு அடி யார்க்கு நல்லார் எழுதியுள்ள உரைக்குறிப்புமே யாம். அவை, ' வான் கண் விழியா வைகறை யாமத்து மீன் றிகழ் விசும்பின் வெண்மதி நீங்கக் காரிரு ணின்ற கடைநாட் கங்குல் ' (சிலப். நாடுகாண். 1-3) ' ஆடித் திங்கட் பேரிருட் பக்கத் தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண வுரைசான் மதுரையோ டரசுகே டுறுமெனு முரையு முண்டே நிரைதொடி யோயே' (சிலப். கட்டுரை. 133-7) " அந்தச் சித்திரைத்திங்கட் புகுதிநாள்-சோதி; திதி-- மூன்றாம் பக்கம், வாரம் - ஞாயிறு. இத்திங்கள் இருபத்தெட்டிற் சித்திரையும் பூரணையுங் கூடிய சனிவாரத்திற் கொடியேற்றி ' நாலேழ் நாளினும் ' என்பதனான் இருபத்தெட்டு நாளும் விழா நடந்து கொடியிறக்கி வைகாசி இருபத்தெட்டினிற் பூருவபக்கத் தின் பதின்மூன்றாம் பக்கமும் சோமவாரமும் பெற்ற அனுடத் தில் நாட்கடலாடி ஊடுதலின் வைகாசி இருபத்தொன்பதிற் செவ் வாய்க்கிழமையும் கேட்டையும் பெற்ற நாசயோகத்து நிறைமதிப் பதினாலாம் பக்கத்து வைகறைப் பொழுதினிடத்து நிலவுபட்ட அந்தரத்திருளிலே யென்றவாறு, அது பூருவபக்கமென்பது தோன் றக் ' காரிருணின்ற கடைநாட்கங்கு' லென்றார்” என்பன வாம். 1. An Indian Ephemeris, Vol. I, part I, pp.459-468.