________________
தமிழ் இலக்கிய வரலாறு இவற்றில் காணப்படும் சோதிடக் குறிப்புக்களைக் கணித் 'துப் பார்த்த காலஞ்சென்ற திரு. .எல். டி. சாமிக்கண்ணுப் பிள்ளை அவர்கள் மதுரைமாநகர் எரியுண்ட.து கி. பி. 756-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 23-ஆம் நாளாகும் என்றும் ஆகவே, கடைச்சங்க காலமும் அதுவேயாதல்வேண்டும் என்றும் கூறி யுள்ளனர்.1 அவ்வறிஞரே அடியார்க்கு நல்லார் உரையில் காணப்படும் சோதிடக் குறிப்புக்கள் சிறிது தவறுடையன என்பர். எனவே, தவறாகவுள்ள குறிப்புக்களின் துணைகொண்டு கணிக்கப் பெறும் காலமும் தவறுடையதேயாம் என்பது திண் ணம். அவ்வுரைக் குறிப்புக்களைக்கொண்டு கடைச் சங்க காலத்தை ஆராய்ந்த திரு. கே. ஜி. சங்கரையர் என்ற அறிஞர், கி. பி. முதல் ஆண்டு முதலாக ஆயிரத்து நானூறாம் ஆண்டு வரையில் ஓராண்டாவது அவற்றோடு முழுவதும் பொருந்திவர வில்லை என்றும், ஆகவே அடியார்க்கு நல்லார் உரையிற் காணப் படும் சோதிடக் குறிப்புக்கள் தவறுடையனவேயாம் என்றும், அவற்றின் துணைகொண்டு திரு. எல். டி. சாமிக்கண்ணுப் பிள்ளை அவர்கள் ஆராய்ந்து கண்ட முடிவு ஒப்புக்கொள்ளத்தக்கதன்று என்றும் மிக விரிவாக ஆராய்ந்தெழுதியிருப்பது2 ஈண்டுக் குறிட் பிடுதற்குரியதாகும். இனி, சைவசமய குரவருள் ஒருவராகிய அப்பரடிகள் தம்முடைய பாண்டி நாட்டுத் திருப்புத்தூர்ப் பதிகத்தில் * நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினோன் காண் '3 என்று கடைச்சங்க கால நிகழ்ச்சி யொன்றைக் கூறியுள்ளனர். அன்றியும், அவ்வடிகள் காலத் தில் நிலவியவரும் சமயகுரவருள் முதல்வனாகிய திருஞான சம்பந்த சுவாமிகள் தம் திருப்பாசுரத்தில் - அந்தண்மதுரைத் 1. An Indian Ephemeris by Diwan Bahadur L. D. Swamikannu Pillai Vol. I, part I, pp. 459-468. 2. செந்தமிழ்த் தொகுதி 15. 3. திருப்புத்தூர்த் திருத்தாண்டகம், பா. 3.