பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இனியவை நாற்பது 37 ராகிய கபிலரைப்போல் சமயக் கொள்கையில் பொது நோக் குடையவர் என்பது தேற்றம். கபிலருடைய கடவுள் வாழ்த் திற்கும் இவ்வாசிரியருடைய கடவுள் வாழ்த்திற்கு முள்ள வேறு பாட்டை நோக்குமிடத்து,1 இவர் கபிலருக்குப் பின்னர் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்திருத்தல் வேண்டு மென்பது நன்கு வெளியாகின்றது. எனவே, இன்னாதவற் றைத் தொகுத்து ஒரு நூல் இயற்றிச் சென்ற கபிலரைப் பின்பற்றியே, பூதஞ் சேந்தனாரும் இனியவை பலவற்றைத் தொகுத்து இந்நூலை இயற்றியுள்ளனர் என்பது நன்கு துணியப் படும். மதுரைத் தமிழாசிரியர் என்று பாராட்டப் பெற்றுள்ள தம் தந்தையாரிடம் இவர் தமிழ் நூல்களைப் பயின்று புலமை யெய்தியவராதல் வேண்டும். இவரைப்பற்றிய பிற செய்திகள் புலப்படவில்லை. கபிலர், இன்னாநாற்பதில் கூறியுள்ள ' ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா' * கல்லா ருரைக்குங் கருமப் பொரு ளின்னா ' ' குழவிக ளுற்ற பிணியின்னா' என்னும் தொடர்க ளோடு இவ்வாசிரியர் இனியவை நாற்பதில் கூறியுள்ள ' ஊனைத் தின் நூனைப் பெருக்காமை முன்னினிதே' ' கற்றறிந்தார் கூறுங் கருமப் பொருளினிதே' ' குழவி பிணியின்றி வாழ்த லினிதே' என்ற தொடர்கள் சொல்லாலும் கருத்தாலும் ஒற் றுமையுடையனவாய் அமைந்திருத்தல் காண்க. இவர் தம் நூலில் எடுத்துரைத்துள்ள அறிவுரைகள் எல்லாம் பொன்னே போல் போற்றத்தக்கனவாம். அவற்றுள், (பா. 2.) (பா. 6.) 1. ' பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகவினிதே' 2, ' கொல்லாமை முன்னினிது' 3. ' பங்கமில் செய்கைய ராகிப் பரிந்தியார்க்கும் அன்புடைய ராத லினிது' (பா. 10.) கபிலர் தம் கடவுள் வாழ்த்தில் பலதேவனையும் மாயோனையும் தனித்தனி யாகக் கூறியிருப்ப, பூதஞ்சேந்தனார் திருமாலை மாத்திரம் சொல்லிவிட் டுப் பிரமதேவனையும் சேர்த்திருத்தல் உணரற்பாலது.