பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

3. இனியவை நாற்பது 'இதுவும் கடவுள் வாழ்த்துட்பட நாற்பத்தொரு வெண் பாக்களையுடைய ஒரு நீதி நூல். இதிலுள்ள ஒவ்வொரு பாட லும் இன்னது இன்னது இனியவை என்று உணர்த்து தலால் இஃது இனியவை நாற்பது என்னும் பெயர் எய்தியது. இந் நூலை இனியது நாற்பது' எனவும் - இனிது நாற்பது' எனவும் அந் நாளில் வழங்கியுள்ளனர் என்று தெரிகிறது. இந்நூல் பதி ணென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ; ஆசிரியர் தொல் காப்பியனாரால் கூறப்பெற்றுள்ள ' அம்மை ' என்னும் வனப்பு: அமையப்பெற்றது. இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் ஆவர். இவர், சேந்தன் என்னும் பெய ரினர் என்பதும் இவருடைய தந்தையார் பூதன் என்ற பெயருடை யவர் என்பதும் அவர் மதுரைத் தமிழாசிரியர் என்னுஞ் சிறப் புப் பெயருடன் அந்நாளில் விளங்கியவர் என்பதும் மேலே குறித் துள்ள தொடர் மொழிகளால் நன்கறியக் கிடக்கின்றன. பூதஞ் சேந்தன் என்பது பூதனுடைய மகன் சேந்தன் என்று பொருள் படும் என்பதைத் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் புள்ளி மயங்கியலிலுள்ள ' அப்பெயர் மெய்யொழித்து ' என்று தொடங்கும் ஐம்பத்தைந்தாம் சூத்திரத்தினால் தெள்ளிதின் உணர்ந்து கொள்ளலாம். எனவே, இனியவை நாற்பதின் ஆசிரியராகிய சேந்தனாரின் தந்தையார் பூதனார் என்பவர், கடைச்சங்க காலத்திற்குப் பின்னர் மதுரையில் புகழுடன் நில விய ஒரு தமிழாசிரியராக இருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. சேந்தனார் தம் நூலில் கடவுள் வாழ்த்துச் செய்யுளில் சிவ பெருமான், திருமால், பிரமதேவன் ஆகிய முப்பெருங் கடவு ளரையும்2 கூறியிருத்தலால் இவர் இன்னா நாற்பதின் ஆசிரியு 1. அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியும் நிற்றலு முரித்தே யம்மென் சாரியை மக்கண் முறைதொகூஉ மருங்கினான " (தொல். எழுத்து, புள்ளிமயங்கியல், சூத். 55. 2. ' கண்மூன் றுடையான்றாள் சேர்தல் கடிதினிதே தொன்மாண் டுழாய்மாலை யானைத் தொழலினிதே முந்துறப் பேணி முக்கான் குடையானைச் சென்றமர்ந் தேத்த வினிது' (இனியவை. கடவுள் வாழ்த்து,