பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ் இலக்கிய வரலாறு இந்நூலில் ' மாண்டவர் மாண்ட' என்று தொடங்கும் பாடலொன்று,1 தமிழ் மக்களின் அறவொழுக்கங்களுக்கும் பழைய நாகரிக நிலைக்கும் முற்றிலும் முரண்பட்ட செய்திகளைக் கூறுவதாயுள்ளது. அவ்வெண்பாவிற் காணப்படும் வடமொழிப் பெயர்கள், அது வடமொழியிலுள்ள ஸ்மிருதி நூல்களைப் பின் பற்றி எழுதப்பட்டிருத்தல் வேண்டும் என்பதை நன்குணர்த்து கின்றன. எனவே, அதில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் தமிழ் நாட்டுப் பழைய வழக்க வொழுக்கங்களைக் குறிக்கவில்லை என்பது அறியற்பாலதாம். இந்நூல் சமணசமயத்தார்க்குரிய சிறப்பு நீதி களைத் தன்னகத்து மிகுதியாகக் கொண்டுள்ளது. ஆகவே, அச் சமயக்கொள்கைகள் பலவற்றை இந்நூலால் தெள்ளிதின் உணர்ந்து கொள்ளலாம். இதன் ஆசிரியராகிய கணிமேதாவியார் என்பார் சிறுபஞ்ச மூலத்திலுள்ள சில பாடல்களின் கருத்துக் களையும் சொற்பொருள்களையும் அப்படியே தம் நூலில் அமைத் திருத்தலால் இவர் அந்நூலை நன்கு படித்திருத்தல் வேண்டும் என்பது திண்ண ம். ஒளரதன், கேத்திரசன், கானீனன், கூடன், கிரிதன், பௌநற்பவன், தத்தன், சகோடன், கிருத்திரமன், புத்திரிபுத்ரன், அபவித்தன், உபகிருதன், தேவாதிதேவன், வைசிரவண்ணன் ஆகிய வடமொழிப் பெயர்களை இவர் எடுத் தாண்டிருத்தலால் அம்மொழிப்பயிற்சியும் இவருக்கு இருந்திருத் தல் வேண்டும் என்பது ஒருதலை. இவர் தொண்டு என்னுஞ் சொல் ஒன்பது என்று பொருள்படுமாறு அதனை ஏலாதியிலுள்ள ஒரு வெண்பாவில் 2 அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 1. 4 மாண்டவர் மாண்ட அறிவினான் மக்களைப் பூண்டவர்ப் போற்றிப் புரக்குங்கால்--பூண்ட ஔாதனே கேத்திரசன் கானீனன் கூடன் கிரிதன்பௌ நற்பவன்பேர் ' (ஏலா. 30.) 2. ஏலாதி, பா. 72.